News
வெளியானது வாரிசு ரஞ்சிதமே பாடல் ப்ரோமோ! – ரசிகர்கள் ரெஸ்பாண்ஸ் எப்படி இருக்கு?
வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் போட்டி போட்டு பொங்கலுக்கு தங்களது படங்களை வெளியிட உள்ளனர். அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தீபாவளிக்கே வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை நவம்பர் 5 அன்று வெளியாக இருக்கிறது. இந்த பாடலின் ப்ரோமோ நேற்று வெளியானது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருப்பதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் விஜய் இதில் தனது வித்தியாசமான நடனம் ஒன்றை இதில் முயற்சித்துள்ளார்.
இந்த மாதிரி போட்டி படங்கள் வருகின்றன என்றாலே விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் போட்டி போட்டு பாடல்களின் வீவ்களையும் லைக்குகளையும் அதிகரிப்பது உண்டு.
ரஞ்சிதமே பாடல் ப்ரோமோ வெளியாகி 19 மணி நேரங்கள் ஆன நிலையில் இதுவரை 60 லட்சத்திற்கும் அதிகமான வீவ்களை இந்த பாடல் பெற்றுள்ளது. இதுவரை ஆறு லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை பெற்ற இந்த பாடல் தற்சமயம் யூ ட்யூப்பில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் தல ஒரு அப்டேட் விட்டால் அதையும் ட்ரெண்ட் செய்துவிடலாமே? என அவர்கள் நேரத்திற்காக காத்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.
ரஞ்சிதமே பாடலை காண இங்கு க்ளிக் செய்யவும்.
