ரெண்டு படமும் நேற்றைய நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – வாரிசு துணிவு வசூல் நிலவரம்!

எந்த ஒரு துறையிலும் போட்டி என்பது எப்போதும் இருக்கும். அதே போல சினிமா துறையிலும் கூட காலம் காலமாக போட்டி இருந்து வருகிறது. தற்சமயம் இந்த போட்டியின் வெளிப்பாடாக நேற்று வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்கள் வெளியாகின.

விஜய் அஜித் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு இறுதியாக வெளியிட்ட திரைப்படம் வீரம் மற்றும் ஜில்லா அதற்கு பிறகு அவர்கள் இருவரும் இந்த படத்தில் போட்டி போட்டுக்கொள்கின்றனர் என்பதால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது.

வசூலை பொறுத்தே இந்த இரு படங்களில் எந்த படம் வெற்றி பெற்ற படம் என்கிற கணக்கிற்கு வர முடியும். இந்நிலையில் உலக அளவில் துணிவை விட வாரிசு படமே அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலக அளவில் துணிவு திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால் வாரிசு திரைப்படம் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. உலக அளவில் துணிவு படத்தை விடவும் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதே இதற்கு காரணம் என ஒரு சாரார் கூறுகின்றனர்.

இந்திய அளவில் பார்க்கும்போது துணிவு திரைப்படம் 24 கோடி ரூபாயும், வாரிசு திரைப்படம் 26.5 கோடி ரூபாயும் ஓடியுள்ளது என கூறப்படுகிறது.

சென்னையில் துணிவு திரைப்படம் நேற்று மட்டும் 3.75 கோடியும், வாரிசு 3.95 கோடியும் வசூலித்து உள்ளது. தமிழ்நாடு அளவில் பார்க்கும்போது துணிவு படம் 19 கோடி வசூல் செய்து முன்னிலையில் உள்ளது. ஆனால் வாரிசு 17 கோடிதான் வசூல் செய்துள்ளது.

துணிவு படம் ஒரு காட்சியை அதிகமாக பெற்று ஓடியதால் நேற்றைய வசூல் சமமானதாக எடுத்துக்கொள்ள முடியாது என கூறப்படுகிறது. ஏனெனில் வாரிசு திரைப்படம் காலை 8 மணி ஷோவில் தான் துவங்கியது. ஆனால் துணிவு இரவு 1 மணி ஷோவிலேயே துவங்கிவிட்டது.

அப்படி இருந்தும் கூட சென்னையில் வாரிசு திரைப்படம் முன்னிலையில் இருப்பதை பார்க்க முடிகிறது.

இதே அளவில் வசூலில் சென்றால் இன்னும் நான்கு நாட்களில் இந்த இரு படங்களுமே 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Refresh