Connect with us

படத்துக்கு டைட்டில் வைகுறதுக்குள்ள ரெண்டு இயக்குனர்கள் தூக்கிட்டாங்க!.. தனுஷ் பட டைட்டிலில் நடந்த கலவரம்!.

dhanush vetrimaaran 1

Cinema History

படத்துக்கு டைட்டில் வைகுறதுக்குள்ள ரெண்டு இயக்குனர்கள் தூக்கிட்டாங்க!.. தனுஷ் பட டைட்டிலில் நடந்த கலவரம்!.

cinepettai.com cinepettai.com

Vetrimaaran and Dhanush : தமிழ் சினிமாவில் வெறும் கமர்சியல் திரைப்படம் என்று எடுக்காமல் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை காட்டும் வகையில் திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். தொடர்ந்து பொல்லாதவன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய படங்கள் யாவும் புதிதாக ஒரு மக்கள் வாழ்வியலை வெளியில் சினிமா மூலமாக ரசிகர்களுக்கு காட்டும் விதமாகவே இருந்தன.

ஆடுகளம் விசாரணை வடசென்னை போன்ற ஒவ்வொரு திரைப்படமும் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை வெளிக் கொணரும் திரைப்படமாகவே இருந்தன. ஆடுகளம் திரைப்படம் வெற்றிமாறன் திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம் என கூறலாம். ஏனெனில் பொல்லாதவன் திரைப்படத்தை கமர்சியல் படமாக எடுக்க வேண்டும் என்று அதை வசூல் ரீதியான ஒரு திரைப்படமாகவே எடுத்தார்.

ஆனால் ஆடுகளம் படத்தை எடுக்கும்பொழுது தனக்கு பிடித்தார் போல படத்தை எடுக்க வேண்டும் என்று முழுக்க முழுக்க உழைத்திருந்தார் வெற்றிமாறன். அந்த திரைப்படத்திற்கு முதன் முதலில் சண்டக்கோழி என்று பெயர் வைக்கத்தான் தீர்மானித்து இருந்தார் வெற்றிமாறன். ஆனால் அந்த பெயரை ஏற்கனவே லிங்குசாமி வாங்கி இருந்தார்.

இது குறித்து லிங்குசாமியிடம் பேசிய போது ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கி விட்டது இனிமேல் அந்த பெயரை மாற்ற முடியாது என்று கூறிவிட்டார் லிங்குசாமி. ஆனால் சண்டகோழி என்கிற பெயருக்கும் லிங்குசாமி எடுத்த திரைப்படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

அதற்கு பிறகு இந்த திரைப்படத்திற்கு சேவல் என்று பெயர் வைக்கலாம் என்று தீர்மானித்திருந்தார் வெற்றிமாறன். அதற்கு பதிவு செய்ய சென்ற பொழுதுதான் அந்த பெயரையும் ஏற்கனவே இயக்குனர் ஹரி வாங்கி இருக்கிறார் என்று வெற்றிமாறனுக்கு தெரிந்தது.

எனவே ஹரியிடம் சென்று அந்த பெயரை வாங்கலாம் என்று பேசிய பொழுது நான் ஏற்கனவே அந்த பெயரில் படத்திற்கு பூஜை போட்டு விட்டேன் ஒருவேளை பூஜை போட வில்லை என்றால் கூட நான் அந்த பெயரை உங்களுக்கு வழங்கி விடுவேன் ஆனால் இப்பொழுது என்னால் முடியாது என்று கூறிவிட்டார் ஹரி. அதன்பிறகு என்ன பெயர் வைக்கலாம் என்று நீண்ட ஆலோசனைக்கு பிறகு படத்திற்கு ஆடுகளம் என்று பெயர் வைத்தனர் ஆனால் ஆடுகளம் என்கிற பெயரும் அந்த திரைப்படத்திற்கு பொருத்தமான ஒரு பெயராக தான் இருந்தது.

POPULAR POSTS

jonita
ajith
lingusamy kamalhaasan1
karthik subbaraj
ajith
To Top