Latest News
காபி வித் DD காணாமல் போனதற்கு இதுதான் காரணம்! கண்ணீர் பேட்டி கொடுத்த DD!
வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் தான் காபி வித் DD புகழ் திவ்யதர்ஷினி. 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ள டிடி, தற்போது திரைப்படங்களில் கால் பதிக்க ஆரம்பித்துவிட்டார். இருந்தும் இடையில் கொஞ்ச நாட்களாகவே இவர் காணமல் போயிருந்தார். இதற்கு காரணம் இது தான் என கண்ணீரோடு அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
குழந்தை நட்சத்திரங்கள் திரைப்படத்தில் நடிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டாலும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானவர் டிடி என்னும் திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த டிடி, தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். டிவி தொகுபாளர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானதில் இவர் பங்கு சற்று அதிகம்.
கமல் ஹாசனின் தயாரிப்பான நள தமயந்தி திரைப்படத்தில் பிராமண பெண்ணாக நடித்த இவர், ரூபா சுவாமிநாதனின் ஒரு சுயாதீன ஆங்கில திரைப்படத்தில் ஒரு பாத்திரத்திற்குப் பிறகு, மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பினார். தற்போது மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பெட்டி அளித்த ddயிடம், கடந்த சில வருடங்களாக காணமல் போனதற்கு கரணம் என்னவென்று கேட்க, அதற்கு கண்ணீர்மல்க பதிலை அளித்துள்ளார் dd. அதாவது, ‘எனக்கு முட்டியில் ஒரு சிறிய பிரச்சினை இருந்தது. அதற்காக நான் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால், அந்த அறுவை சிகிச்சை எதிர்பாராத விதமாக தவறாகி விட்டது.அதை சரி செய்வதற்காக மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டேன் ஆனால் அதுவும் பலன் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல், இந்த பிரச்சினை ஆரம்பித்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டதாகவும், இந்த 10 வருஷத்தில் வலி இல்லாத நாட்களே இல்லை எனவும் கூறிய அவர், இந்த பத்து ஆண்டில் வலியில்லாமல் நான் தூங்கிய நாட்கள் பத்து என்று சொன்னால் அது மிகையாகாது. தினமும் வலி மட்டும் தான் இருந்தது. இதை சாப்பிட்டா வலி போகுமா, என்ன செய்தா வலி போகும் என்று வலியோடுதான் வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன் என கண்ணீரோடு பேசிய பேட்டி பார்போரையும் கண்கலங்க வைக்கும்.
இருந்தாலும், தனக்கு டிராவல் பண்ணுவது பிடிக்கும் என்பதால், வீல் சேரில் பல நாடுகளுக்கு செல்கிறேன் எனக் கூறிய ddயின் தன்னம்பிக்கை பாராட்டிற்குரியது.