News
தல தளபதி ரெண்டு பேர் படமும் ஒரே நாளில் – டேட் கன்ஃபார்ம்
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன், ரஜினி கமல் என ரசிகர்கள் இடையே போட்டி இருப்பது என்பது பல காலங்களாகவே இருந்து வருகிறது. சொல்லபோனால் சினிமா துவங்கிய காலம் முதலே இங்கு இந்த போட்டிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

உண்மையில் அந்த நாயகர்கள் நண்பர்களாகவே இருந்தாலும் கூட பொது வெளியில் அவர்கள் இருவருக்கும் போட்டி இருப்பது போன்ற நிலை உருவாகிவிடுகிறது. அந்த வகையில் விஜய் அஜித்திற்கு இடையே உள்ள போட்டி என்பது மக்களிடையே இன்றும் இருந்து வருகிறது.

தற்சமயம் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் தயாராகி வருகிறது. அதே போல இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களுமே வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல்கள் வந்துள்ளன.

அதன் படி ஜனவரி 12 அன்று துணிவு திரைப்படமும், ஜனவரி 13 அன்று வாரிசு திரைப்படமும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு இதே போல ஜனவரி 10 அன்று வீரமும் ஜனவரி 11 அன்று விஜய் நடித்த ஜில்லா படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
8 வருடங்களுக்கு பிறகு தற்சமயம் மீண்டும் அதே போல தல தளபதியின் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
