வித்தியாசமான தோற்றத்தில் பேட்டிக்கு வந்த விஜய் ஆண்டனி.. இதுதான் காரணமாம்.!

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக மாறி இருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் ஓரளவு வரவேற்பு பெற்று விடுகின்றன. சில படங்கள் தோல்வியை கண்டாலும் கூட விஜய் ஆண்டனிக்கு என்று ஒரு மார்க்கெட் தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தற்சமயம் மார்கன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த திரைப்படத்தில் வருகிற கதாபாத்திரத்தின்படி உடலின் ஒரு பக்கம் இவருக்கு கருப்பாக இருக்கும்.

vijay antony
vijay antony

வில்லனோடு சண்டை போட்டதால் ஏற்பட்ட பாதிப்பு தான் இது என்பது ட்ரைலரில் பார்த்ததன் மூலமாக தெரிகிறது ஆனால் இந்த படத்தின் டிரைலர் வெளியாவதற்கு முன்பிருந்தே இவர் அந்த கெட்டப்பில் நிறைய பேட்டிகளை கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் இதுக்குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுது படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தேன் என கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.