அட்லீ வீட்டு விஷேசம்! – வளைகாப்புக்கு சென்ற விஜய்!

அட்லியும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். தொடர்ந்து விஜய்க்கு வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர் அட்லீ.

தற்சமயம் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் எடுத்து வருவதால் இப்போதைக்கு அட்லி தமிழ் சினிமாவில் எந்த படம் இயக்கவில்லை. விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி,பிகில்,மெர்சல் என அனைத்து படங்களுமே ஹிட் படங்களாகவே இருந்தன.

எனவே தமிழில் அட்லீ படங்கள் இயக்காவிட்டாலும் கூட தளபதி விஜயுடனான நட்பு இன்னமும் நீண்டுக்கொண்டுதான் செல்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு அட்லீ காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

வெகுநாட்களுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அட்லீயின் மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவருக்கு வளைகாப்பு விழா நடந்துள்ளது.

இந்த விழாவில் விஜய் விருந்தினராக கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார்.

Refresh