கடைக்குட்டி சிங்கமா விஜய்? –  வாரிசு ட்ரைலர் எப்படி இருக்கு!

தளபதி விஜய் நடித்து வம்சி இயக்கி வருகிற பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் ட்ரைலர் சில நிமிடங்களுக்கு முன்பு வெளியானது.

எப்போது ட்ரைலர் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளது. ஒரு கூட்டு குடும்பத்தின் தலைவராக சரத்குமார் இருக்கிறார்.

சரத்குமாருக்கு மூன்று பிள்ளைகள். அதில் கடைசி பையனாக விஜய் இருக்கிறார். பிசினஸ் மற்றும் குடும்பம் ஆகிய விஷயங்களை இரண்டு பிள்ளைகள் பார்த்துக்கொள்ள போட்டோகிராபரான விஜய் இந்தியா முழுவதும் சுற்றிகொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருக்கிறார்.

இந்த நிலையில் பிரகாஷ் ராஜ் பிசினஸ் ரீதியாக சரத்குமாருக்கு பிரச்சனை கொடுக்க இதனால் களத்தில் இறங்குகிறார் விஜய். தெலுங்கு சினிமா அளவிற்கு படத்தில் சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

படத்தில் ஃபேமிலி செண்டிமெண்ட் காட்சிகளும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் கண்டிப்பாக தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.

துணிவு வாரிசும் இரண்டும் சரி சமமாக போட்டிக்கொள்வதற்கு ஏற்றவாறு ஒன்றுக்கு ஒன்று நிகரான படமாக அமைந்துள்ளன. எனவே இந்த பொங்கல் சிறப்பாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

வாரிசு ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.

Refresh