நம்ம விஜய் சேதுபதியா இது? – விடுதலை திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள்

தமிழில் சில இயக்குனர்களின் திரைப்படத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருப்பதுண்டு. அப்படி மக்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர்களில் ஒருவர்தான் வெற்றி மாறன்.


வட சென்னை, அசுரன், ஆடுகளம், பொல்லாதவன் என ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதைகளம் மற்றும் திரைக்கதையை கொண்டிருப்பவர் வெற்றி மாறன். இவர் தற்சமயம் நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக கொண்டு விடுதலை என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.


இந்த திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் ’துணைவன்’ என்கிற சிறுகதையின் தழுவல் ஆகும். இந்த கதையை வெற்றிமாறன் தனக்கே உரிய பாணியில் மாற்றி அமைத்திருப்பார் என பேசப்படுகிறது.


ஒரு போராளியின் கதையாக விடுதலை இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த திரைப்படத்தின் சூட்டிங் போட்டோக்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது. அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு விஜய் சேதுபதியின் தோற்றம் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் சூரியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே ரசிகர்கள் இந்த படத்திற்காக பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.

Refresh