எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களின் மிக முக்கியமானவராக நடிகர் விஜயகாந்த் பார்க்கப்படுகிறார். பெரும்பாலும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
ஆனால் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பொழுது தொடர்ந்து அவர் கேளிக்கு உருவாக்கப்பட்டார். உண்மையில் விஜயகாந்த் எப்படிப்பட்டவர் என்பதே அப்பொழுது மக்களுக்கு பெரிதாக தெரியவில்லை. ஏனெனில் சமூக வலைதளங்களின் வளர்ச்சி இப்போது இருக்கும் அளவிற்கு இருக்கவில்லை.
மிக தாமதமாக தான் விஜயகாந்த் தமிழ் சினிமாவிலும் சரி பொதுமக்கள் மத்தியிலும் சரி எவ்வளவு நன்மைகள் செய்திருக்கிறார் என்பது மக்களுக்கு தெரிய தொடங்கியது.
பெருமை மிக்க நடிகர்:
அந்த வகையில் விஜயகாந்த் குறித்து பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் கூறிய சில விஷயங்கள் அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜயகாந்தின் நண்பர் ஆவார்.
அவரது முதல் படமே சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம்தான். அந்த படத்தை தயாரித்து வந்த பொழுது நடிகர் முரளி அதில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக வராமல் நடிகர் முரளியும் வடிவேலுவும் தொடர்ந்து மது அருந்திவிட்டு தொல்லை கொடுத்து வந்திருக்கின்றனர்.
முரளி படத்தில் பிரச்சனை:
ஒரு கட்டத்திற்கு மேல் இதை தாங்க முடியாத தயாரிப்பாளர் விஜயகாந்திடம் சென்று கூறி இருக்கிறார். விஷயத்தை கேள்விப்பட்ட விஜயகாந்த் உடனே கிளம்பி வந்து முரளியையும் வடிவேலையும் சத்தம் போட்டு திட்டி இருக்கிறார்.
அதில் ஆடி போன முரளி இனி படப்பிடிப்பு முடியும் வரை குடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இது என்னுடைய திரைப்படம் மாதிரி எனவே இதில் ஒழுங்காக நடிக்க வேண்டும் என்று விஜயகாந்த் அவர்களுக்கு வார்னிங் கொடுத்து இருக்கிறார். இந்த தகவலை ஒரு பேட்டியில் அந்த தயாரிப்பாளர் பகிர்ந்திருக்கிறார்.