Tag Archives: முரளி

அந்த பழக்கத்தால் வாய்ப்பை இழந்த முரளி.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர்..!

ரஜினி மாதிரியான நடிகர்கள் பிரபலமாக இருந்த அதே காலகட்டங்களில் வளர்ச்சி பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் முரளி. ஆரம்பத்தில் முரளிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.

ஆனால் போக போக அவருக்கான வாய்ப்புகள் என்பதே குறைய தொடங்கியது. பெரும்பாலும் மற்ற நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு காரணமாக முன்பு நடித்த நடிகர்களுக்கு வரவேற்பு என்பது குறையும்.

ஆனால் முரளியை பொருத்தவரை அவருடைய கேரக்டர் தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் என்கிறார் இயக்குனர் வி சேகர். இயக்குனர் வி சேகர் சமீபத்தில் ஒரு பேட்டியில் குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது முரளியை பொறுத்தவரை அவருக்கு வாய்ப்புகள் என்பது அதிகமாகவே வந்து கொண்டிருந்தது.

ஆனால் படப்பிடிப்புகளுக்கு அவர் நேரத்திற்கு வரமாட்டார் மது அருந்துவது பெண்கள் பழக்கம் போன்ற பழக்கங்கள் முரளிக்கு இருந்தது. எவ்வளவோ தயாரிப்பாளர்கள் அவரிடம் படப்பிடிப்பு சமயங்களில் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறினாலும் அவர் கேட்கவில்லை.

ஆர்.பி.சௌத்ரி மாதிரியான பெரிய தயாரிப்பாளர்களை கூறியும் அவர் கேட்கவில்லை இதனால் அந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் அவரை கைவிட தொடங்கினர். இதனால்தான் முரளிக்கு வாய்ப்புகள் என்பதே கிடைக்காமல் போனது என்று கூறியிருக்கிறார் வி சேகர்.

முரளியால் என் வாழ்க்கையில் நடந்த மாயாஜாலம்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்.!

திறமை இருக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் கருப்பாக இருந்தாலும் பெரிய உயரத்தை தொட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் இருந்துள்ளனர். அப்படியான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் முரளி.

இந்த நிலையில் முரளியுடன் தனது அனுபவம் குறித்து இயக்குனர் நாகராஜ் தெரிவித்துள்ளார். முரளி அந்த சமயங்களில் மிகவும் பிஸியாக இருந்தார். சின்ன இயக்குனர்கள் எல்லாம் அவரை சந்தித்து கதை சொல்ல வேண்டும் என்றாலே அதற்கு 6 மாத காலம் காத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில் நாகராஜ் அன்று எப்படியோ முரளியிடம் பேசுவதற்கான வாய்ப்பை பெற்றார். முரளி கொஞ்ச நேரம்தான் எப்போதும் கதையை கேட்பார். ஆனால் நாகராஜ் கதை சொல்லும் விதம் மிகவும் மாறுபட்டதாக இருந்தது. எனவே முரளி பல மணி நேரங்கள் அந்த கதையை கேட்டார்.

murali

கதையை கேட்டு முடிக்கும்போது மணி 1 ஆகியிருந்தது. அதற்கு பிறகு இயக்குனரை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டார். அப்போது நாகராஜ். சார் தயாரிப்பாளரிடம் என்ன சொல்வது என கேட்டார். அதற்கு பதிலளித்த முரளி நான் அவர்கிட்ட பேசிக்கிறேன் என சென்றுவிட்டார்.

மறுநாள் தயாரிப்பாளரை சந்தித்தார் நாகராஜ். யோவ் முரளிகிட்ட என்ன மாயம் செஞ்சே. பொதுவாக அவ்வளவு சீக்கிரம் படத்தில் கமிட் ஆக மாட்டார். ஆனால் இப்போ உன் கதை ரொம்ப பிடிச்சிட்டுன்னு சொல்றார். கால் ஷீட்டும் தரேன்னு சொல்லி இருக்கார் என கூறினார்.

அப்படி உருவான திரைப்படம்தான் தினந்தோறும். இந்த நிகழ்வை இயக்குனர் நாகராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

போதையில் பிரச்சனை செய்த முரளி.. எண்ட்ரி கொடுத்த கேப்டன்.. ஆடிப்போன படப்பிடிப்பு தளம்.. இந்த விஷயம் தெரியுமா?.

எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களின் மிக முக்கியமானவராக நடிகர் விஜயகாந்த் பார்க்கப்படுகிறார். பெரும்பாலும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

ஆனால் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பொழுது தொடர்ந்து அவர் கேளிக்கு உருவாக்கப்பட்டார். உண்மையில் விஜயகாந்த் எப்படிப்பட்டவர் என்பதே அப்பொழுது மக்களுக்கு பெரிதாக தெரியவில்லை. ஏனெனில் சமூக வலைதளங்களின் வளர்ச்சி இப்போது இருக்கும் அளவிற்கு இருக்கவில்லை.

மிக தாமதமாக தான் விஜயகாந்த் தமிழ் சினிமாவிலும் சரி பொதுமக்கள் மத்தியிலும் சரி எவ்வளவு நன்மைகள் செய்திருக்கிறார் என்பது மக்களுக்கு தெரிய தொடங்கியது.

பெருமை மிக்க நடிகர்:

அந்த வகையில் விஜயகாந்த் குறித்து பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் கூறிய சில விஷயங்கள் அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜயகாந்தின் நண்பர் ஆவார்.

அவரது முதல் படமே சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம்தான். அந்த படத்தை  தயாரித்து வந்த பொழுது நடிகர் முரளி அதில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக வராமல் நடிகர் முரளியும் வடிவேலுவும் தொடர்ந்து மது அருந்திவிட்டு தொல்லை கொடுத்து வந்திருக்கின்றனர்.

முரளி படத்தில் பிரச்சனை:

ஒரு கட்டத்திற்கு மேல் இதை தாங்க முடியாத தயாரிப்பாளர் விஜயகாந்திடம் சென்று கூறி இருக்கிறார். விஷயத்தை கேள்விப்பட்ட விஜயகாந்த் உடனே கிளம்பி வந்து முரளியையும் வடிவேலையும் சத்தம் போட்டு திட்டி இருக்கிறார்.

அதில் ஆடி போன முரளி இனி படப்பிடிப்பு முடியும் வரை குடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இது என்னுடைய திரைப்படம் மாதிரி எனவே இதில் ஒழுங்காக நடிக்க வேண்டும் என்று விஜயகாந்த் அவர்களுக்கு வார்னிங் கொடுத்து இருக்கிறார். இந்த தகவலை ஒரு பேட்டியில் அந்த தயாரிப்பாளர் பகிர்ந்திருக்கிறார்.

எனக்கு கெட்ட நேரத்துல கெடச்ச வாய்ப்பு முரளியோட பண்ணுன படம்!.. கதையையே மாத்திட்டாரு!.. இயக்குனருக்கு நடந்த சோகம்!.

ஒவ்வொரு இயக்குனருக்கும் அவர்கள் இயக்கும் ஒவ்வொரு படமும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.  ஏனெனில் ஒரு படம் தோல்வியை கண்டால் அது ஹீரோவையும் தயாரிப்பாளரையும் கூட அதிகமாக பாதிக்காது. ஆனால் இயக்குனருக்கு அது அதிக பாதிப்பை உண்டாக்கும்.

எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தால் அவர்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விடும். அப்படி சினிமாவில் தனது படத்தில் எடுத்த ரிஸ்க் குறித்து இயக்குனர் விஜி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இவர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியான திரைப்படம் அள்ளி தந்த வானம். இந்த படம் வெளிவந்த சமயத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது. அவர் இந்த படத்தை இயக்க இருந்த சமயத்தில் பிரபுதேவாவும் நடிகை பூர்ணிதாவும் மட்டும்தான் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருந்தனர்.

வேறு யாருமே உறுதியாக படத்தில் நடிக்க இருப்பதாக கூறவில்லை. இந்த நிலையில் படத்தில் ஒரு முக்கியமான கெஸ்ட் கதாபாத்திரத்திற்கு பெரிய நடிகர்களிடம் பேசி வந்தார் இயக்குனர். ஆனால் யாருமே ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் முரளி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் வந்தோம் போனோம் என எனக்கு கதாபாத்திரம் இருக்க கூடாது. குறைந்தது அந்த படத்தில் எனக்கு இரண்டு சண்டை காட்சிகளாவது வேண்டும் என முரளி கேட்டுள்ளார்.

எனவே கதையை அதற்கு தகுந்தாற் போல மாற்றி அமைத்தார் இயக்குனர். படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அந்த மாற்றப்பட்ட காட்சிகள் படத்தில் ஒரு நெருடலான விஷயமாகவே இருந்தது. இதுக்குறித்து இயக்குனர் ஒரு பேட்டியில் கூறும்போது சிலருக்கு நல்ல நேரத்தில் பட வாய்ப்பு கிடைக்கும் சிலருக்கு கெட்ட நேரத்தில் கிடைக்கும் எனக்கு கெட்ட நேரத்தில் கிடைத்துவிட்டது என நினைக்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.

என் கலரை பார்த்து மணிரத்தினம் சார் சான்ஸ் கொடுக்கலை!.. ஆனந்தராஜ் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு!..

Anandharaj: கோலிவுட் வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர் ஆனந்தராஜ். ஆனந்தராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான பொழுது அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாகவே இருந்தன.

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார் ஆனந்தராஜ். ஒரு காலகட்டங்களில் அவர் திரையில் தோன்றினாலே பலருக்கும் பயம் வரும் அளவிற்கு கொடூரமான வில்லனாக நடித்திருந்தார் ஆனந்தராஜ்.

சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வர துவங்கிய பிறகு ஆனந்தராஜிற்கு மார்க்கெட் குறைய தொடங்கியது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் வாய்ப்புகளை இழந்தார். பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் பொழுது காமெடி நடிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஆனந்தராஜ்.

காமெடியனாக களம் இறங்கிய வில்லன்:

அதற்கு முந்தைய தலைமுறையினர்கள் பார்த்து மிரண்டுப்போன ஒரு நடிகரை தற்சமயம் இருக்கும் 2கே கிட்ஸ் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதுதான் நடிகர் ஆனந்தராஜ். இப்படியாக எந்த ஒரு நடிப்பையும் சிறப்பாக நடிக்க கூடியவராக ஆனந்தராஜ் இருந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் மணிரத்தினம் திரைப்படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோனது குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பகல் நிலவு என்கிற திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நண்பன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆனந்தராஜுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நிறத்தால் போன வாய்ப்பு:

அப்போது படத்திற்கு எப்படி எல்லாம் லைட்டிங் வைக்க வேண்டும் என்று மணிரத்தினம் யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் ஆனந்தராஜின் நிறத்தை பார்த்திருக்கிறார். அப்போது முதலே ஆனந்தராஜ் நல்ல வெள்ளை நிறத்தில் இருப்பார்.

இதனை பார்த்த மணிரத்தினம் படத்தின் கதாநாயகன் கருப்பாக இருக்கிறார் அவரது நண்பன் வெள்ளையாக இருக்கிறார் நாம் எப்படி லைட் வைத்தாலும் முரளியை விட ஆனந்தராஜ் தானே நன்றாக தெரிவார் என்று கேட்டிருக்கிறார்.

அதனை தொடர்ந்து அந்த படத்தில் இருந்து ஆனந்தராஜை நீக்கிவிட்டனர் அந்த படத்தில் மட்டும் நண்பனாக நடித்திருந்தால் தொடர்ந்து வில்லனாக நடிக்காமல் வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பார் ஆனந்தராஜ் ஆனால் அவரது வெள்ளை நிறத்தின் காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது.

முதல் படமே 100 நாள் ஹிட்டு!.. அந்த விஷயத்தை மட்டும் பண்ணாமல் இருந்திருந்தால்… புலம்பும் முரளி பட இயக்குனர்!..

சினிமாவில் எல்லோருக்குமே உடனே இயக்குனர் ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது. அதற்காக மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். தற்சமயம் பெரும் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தனது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்தை இயக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் என்று தந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்தியா முழுவதும் பல தயாரிப்பாளர்களிடம் சென்று கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான முறை மாநகரம் திரைப்படத்தின் முழு கதையையும் கூறி இருக்கிறேன். அப்படியெல்லாம் கூறியும் கூட ஒரு தயாரிப்பாளருக்கு மட்டும் தான் அந்த கதை பிடித்திருக்கிறது என்று அதை தயாரிக்க ஒப்புக்கொண்டார் என்று கூறியிருக்கிறார்.

இப்போதைய நிலையிலேயே அவ்வளவு கஷ்டங்கள் இருக்கும் பொழுது  1996 களிலேயே மிகவும் எளிதாக வாய்ப்பை பெற்று இயக்குனரானவர் இயக்குனர் நாகராஜ். இயக்குனர் நாகராஜ் வெகு காலங்களாக உதவி இயக்குனராக இருந்து வந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு காதல் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக வேண்டுமென்று ஆசை இருந்தது.

சரிவை கண்ட இயக்குனர்:

தனது நண்பருக்கு நிகழ்ந்த நிஜமான காதல் கதையை அடிப்படையாகக் கொண்டே ஒரு கதையை எழுதினார் நாகராஜ். அந்த கதையை லாவண்யா என்னும் தயாரிப்பாளரிடம் சென்று கூறினார். அதற்கு முன்பு கதையை வேறு எந்த தயாரிப்பாளரிடமும் அவர் கூறவில்லை. முதல் தயாரிப்பாளரே லாவண்யா தான் லாவண்யாவிற்கு அந்த கதை பிடித்து விட்டது படமாக்கலாம் என்று கூறிவிட்டார்.

அடுத்த ஒரு மாதத்தில் படபிடிப்பும் தொடங்கிவிட்டது முரளியை கதாநாயகனாக வைத்து சுவலட்சுமியை கதாநாயகியாக வைத்து தினந்தோரும் என்கிற அந்த திரைப்படத்தை இயக்கினார் நாகராஜ். முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. கிட்டத்தட்ட 100 நாட்கள் ஓடி வெற்றி கொடுத்தது தினந்தோரும் திரைப்படம்.

இந்த நிலையில் பெரும் உச்சத்தை அடைந்திருக்க வேண்டிய இயக்குனர் நாகராஜ் தனது குடி பழக்கத்தின் காரணமாக சினிமாவில் சரிவை கண்டித்தார் தெலுங்கு சினிமாவில் இருந்து பெரும் நடிகர் எல்லாம் அவரை படம் இயக்குவதற்கு அழைத்த பொழுது மது அருந்திவிட்டு அந்த திரைப்படங்களின் வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் நாகராஜ்.

இதனை ஒரு பேட்டியில் கூறிய அவர் முதல் படமே இவ்வளவு சிரமம் இல்லாமல் கிடைத்ததால் தான் இப்படி மோசமாகிவிட்டேன் என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ்க்கே நோ சொன்ன முரளி… அருமையான கதையை விட்டுட்டிங்களே சார்!.

Super Good Films : 1990களில் பிரபலமாக இருந்த தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை அதன் உரிமையாளரான ஆர்.பி சௌத்ரிதான் படங்களுக்கான கதைகளை தேர்ந்தெடுப்பார்

ஒரு திரைப்படத்திற்கான கதையையும் அந்த கதைக்கான கதாநாயகனையும் அவரே முடிவு செய்வார். அப்படி அவர் முடிவு செய்யும் ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான் இயக்குனர் எழில் ஒரு கதையை எழுதி வைத்துக்கொண்டு அதற்கு தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது இருந்த டாப் நடிகர்கள் வரை குறைந்த வரவேற்பு பெற்ற நடிகர்கள் வரை யாருமே அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் அந்த கதை ஆர்.பி சௌத்ரியிடம் வந்தது. எழில் அந்த கதையை கொண்டு செல்வதற்கு முன்பு ஒரு பெரிய கதாநாயகனுக்கு ஏற்றார் போல சில சண்டை காட்சிகள் எல்லாம் வைத்து அந்த கதையை மாற்றி அமைத்து இருந்தார். அந்த கதையை ஆர்.பி சௌத்ரி கேட்ட பொழுது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.

இந்த திரைப்படத்தில் முரளியை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்பது ஆர்.பி சௌத்ரியின் எண்ணமாக இருந்தது. எனவே எழிலிடம் கதையை முதலில் முரளியிடம் கூறுங்கள் அவர் அதற்கு ஒப்புக் கொண்டால் அடுத்து நாம் படபிடிப்பை துவங்கலாம் என்று கூறினார்.

உடனே எழிலும் அந்த கதையை முரளியிடம் கூறினார் ஆனால் முரளிக்கும் அந்த கதை பிடிக்கவில்லை. எனவே அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இது ஆர்.பி சௌத்ரிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி விட்டது.

ஏனெனில் பொதுவாக ஆர்.பி சௌத்ரி ஒரு கதையை பரிந்துரைக்கிறார் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிகர்கள் அதில் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். ஆனால் முரளி அப்படி செய்யாமல் விட்டது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அந்த கதையை விஜய்யிடம் சென்று கூறினார்.

விஜய் உடனே அந்த கதையில்  நடிக்க ஒப்புக்கொள்ள துள்ளாத மனமும் துள்ளும் என்கிற அந்த திரைப்படம் தயாரானது. ஒருவேளை அந்த திரைப்படத்தில் முரளி நடித்திருந்தால் அவருக்கு அது பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கும்.

ஒரே நிமிஷத்தில் கதையை சொல்லி ஓ.கே பண்ணுன இயக்குனர்!.. ஆடிப்போன முரளி!.. எந்த படம் தெரியுமா?

சினிமாவில் வெள்ளையாக இருந்தால்தான் கதாநாயகனாக, கதாநாயகியாக ஆக முடியும் என்கிற மனநிலை பெரும்பான்மையாக இருந்தாலும் பல நடிகர்களும் நடிகைகளும் அதை தொடர்ந்து உடைத்து உள்ளனர்.

அப்படியான நடிகர்களில் நடிகர் முரளியும் ஒருவர். நடிகர் முரளி கருப்பான தேகத்தில் இருந்தாலும் கூட அவரது நடிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்றே கூறலாம். 1984 இல் வெளிவந்த பூவிலங்கு என்கிற திரைப்படம் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியது. அப்படி அறிமுகமான பிரபலங்களில் நடிகர் முரளியும் ஒருவர்.

முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்றார் முரளி. எந்த ஒரு படத்தையும் பிடித்துவிட்டால் உடனே அதில் கமிட் ஆகிவிடுவார் முரளி. இப்படி ஒருமுறை அவசர அவசரமாக வெளிநாட்டிற்கு கிளம்பி கொண்டிருக்கும்போது ஒரு படத்திற்கான வாய்ப்பு அவருக்கு வந்தது.

இயக்குனர் கதிர் அப்போது கதை சொல்வதற்காக வந்திருந்தார். ஆனால் அவசரமாக கிளம்பி கொண்டிருந்ததால் படத்திற்கு கதை கேட்க நேரமில்லாமல் இருந்தார் முரளி. இருந்தும் இயக்குனரிடம் நீங்கள் கதை சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டார்.

2 மணி நேரம் ஆகும் என இயக்குனர் சொல்ல அவ்வளவு நேரமெல்லாம் இல்லை என முரளி கூறியுள்ளார். உடனே இயக்குனர் சார் நான் ஒரு நிமிடத்தில் கதையை சொல்கிறேன் என கதையை கூற துவங்கினார்.

கிராமத்தில் இருந்து நகரத்திற்கு மருத்துவம் படிக்க ஒரு இளைஞன் வருகிறான். ஆனால் திரும்ப அவன் கிராமத்திற்கு செல்லும்போது மருத்துவனாக செல்லவில்லை மாறாக நோயாளியாக செல்கிறான் என கூறுகிறார். இதை கேட்ட முரளி ஏன் என கேட்க அவன் காதல் தோல்வியடைகிறான் என்கிறார் இயக்குனர் கதிர்.

பிறகு கதையை கொஞ்சம் விரிவாக கேட்ட முரளி அந்த கதைக்கு ஓ.கே சொல்கிறார். அந்த கதைதான் பிறகு இதயம் என்கிற பெயரில் வெளியானது. அதற்கு பிறகு முரளி பெயரும் இதயம் முரளி என்றானது.