விக்ரம் First Single.. முதல் பாட்டே ராஜா பாட்டா..? – வெளியானது செம அப்டேட்!

பிரபல தமிழ் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முழுக்க ஆக்‌ஷன் ப்ளாகான இந்த படம் தீவிர கமல் ரசிகனான லோகேஷின் கனவு படமும் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு கோலிவுட்டில் நடக்க உள்ள பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவாக இது இருக்கும்.

இந்நிலையில் இன்னொரு சர்ப்ரைஸ் அறிவிப்பதாக மே 11ம் தேதியன்று விக்ரம் படத்தில் First Single வெளியாக உள்ளது.

விக்ரம் படம் ஷூட்டிங் தொடங்கியபோது வெளியிடப்பட்ட க்ளிம்ப்ஸில், கமல் நடித்த பழைய விக்ரம் படத்தில் வந்த “விக்ரம்” என்னும் பாடலையே மிக்ஸ் செய்து பயன்படுத்தியிருந்தார்கள். பிரபலமான அந்த பாட்டுக்கு அப்போது இளையராஜா இசையமைத்திருந்தார்.

தற்போது இளையராஜாவை ட்ரிபூட் செய்யும் விதமாக அந்த பாடலின் ரீமேக் பாடல் Fisrt Single ஆக வெளியாகலாம் என்றும், விக்ரம் படத்தின் தீம் மியூசிக்காக அது இருக்கலாம் என்றும் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. என்ன பாடல் என்பது மே 11ம் தேதி தெரிய வரும்.

Refresh