தமிழில் உள்ள நடிகர்களில் அரசியல் ரீதியான கண்ணோட்டம் கொண்டவர் நடிகர் விஷால். தொடர்ந்து சமூகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார். நடிகர் சங்கத்தில் பொறுப்பை பெற்றது முதலே ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்து வருகிறார் விஷால்.
விஜயகாந்த் போலவே விஷாலும் அவரது அலுவலகத்திற்கு யார் பசி என்ன வந்தாலும் அவர்களுக்கு சமைத்து கொடுப்பதற்காகவே இரண்டு வேலையாட்களை வைத்துள்ளார். இதற்கு முன்பு இதே விஷயத்தை கேப்டன் விஜயகாந்த் செய்திருந்தார். அவர் மீது பற்று கொண்டு விஷாலும் இதை செய்து வருகிறார்.
அதே போல மார்க் ஆண்டனி திரைப்படம் ஓடி கொண்டிருந்தப்போது ஒவ்வொரு டிக்கெட் தொகையில் இருந்து ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு அளிக்க போவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தற்சமயம் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக தூத்துக்குடியில் உள்ள எம்.குமாரசக்கனபுரம் என்னும் கிராமத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு சென்ற பிறகுதான் அந்த மக்கள் அங்கு தண்ணீருக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர் என்பது விஷாலுக்கு தெரிந்துள்ளது. உடனே அந்த கிராமத்தில் போர் அமைத்து மக்களுக்காக இரண்டு தண்ணீர் டேங்குகளை வாங்கி வைத்து உதவி செய்துள்ளார் விஷால். இந்த நிகழ்ச்சி தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.