ஹாலிவுட் சினிமாவில் எப்போதுமே வித்தியாசமான கதைகளங்களை கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருவதுண்டு. அந்த வகையில் மர்மங்கள் நிறைந்த ஹாரர் திரைப்படங்களும் கூட வித்தியாசமான கதை அமைப்பில் நிறைய வருகின்றன.
அப்படியாக ஒரு திரைப்படமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் வரும் திரைப்படம்தான் வெப்பன். இந்த திரைப்படத்தின் பெயர் வெப்பன் என இருந்தாலும் கூட படத்தின் கதை அம்சம் முழுக்க முழுக்க மர்மமானதாக இருக்கிறது.
திரைப்படத்தின் கதைப்படி ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் ஒரு வகுப்பை சேர்ந்த அனைத்து மாணவர்களும் திடீரென ஒரு நாள் காணாமல் போகின்றனர். அதனை தொடர்ந்து ஏன் குழந்தைகள் காணாமல் போனார்கள் என்பதை போலீஸார் துப்பு துலக்க துவங்குகின்றனர்.
அப்போது அவர்களுக்கு மர்மமான சிசிடிவி காட்சிகள் கிடைக்கின்றன. அதில் அந்த குழந்தைகள் தங்கள் கைகளை விரித்துக்கொண்டு அவர்களாகவே காட்டுக்குள் சென்று மாயமாகிவிடுகின்றனர். இதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை கண்டுப்பிடிப்பதாக கதை செல்கிறது.
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.