Connect with us

ஜேசன் சஞ்சய் படத்தில் நடிப்பதற்காக வெயிட்டிங்கில் இருக்கும் ஹீரோக்கள்!.. யார் யார் தெரியுமா?

Latest News

ஜேசன் சஞ்சய் படத்தில் நடிப்பதற்காக வெயிட்டிங்கில் இருக்கும் ஹீரோக்கள்!.. யார் யார் தெரியுமா?

Social Media Bar

தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறைக்கான இடத்தை பல கதாநாயகர்களும், இயக்குனர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி வருகின்றனர். தற்சமயம் அந்த வரிசையில் முக்கியமான ஆளாக ஜேசன் சஞ்சய் களம் இறங்கியுள்ளார்.

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் தற்சமயம் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். அவரது வருகையின் காரணமாக தளபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இயக்குனர் ஆவதற்காக வெளிநாடுகளுக்கு சென்று படித்து முடித்து தற்சமயம் நாடு திரும்பியுள்ளார் ஜேசன் சஞ்சய். இதனால் அவர் இயக்கும் திரைப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஆனால் இந்த படத்தின் கதாநாயகன் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. ஆனால் அஜித் அல்லது விஜய் சேதுபதிதான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களை வைத்துதான் ஜேசன் சஞ்சய் படம் இயக்குவார் என பேச்சுக்கள் உள்ளன. அதிகப்பட்சம் ஹரிஸ் கல்யாண், அதர்வா, கவின் இவர்கள் மூவரில் ஒருவர்தான் கதாநாயகனாக நடிப்பார்கள் என கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top