Connect with us

எனக்கு மியூசிக் போட தெரியாதுன்னு தனுஷ் கண்டிப்பிடிச்சிட்டாரு!.. விஜய் ஆண்டனிக்கு நடந்த சம்பவம்!.

dhanush vijay antony

Cinema History

எனக்கு மியூசிக் போட தெரியாதுன்னு தனுஷ் கண்டிப்பிடிச்சிட்டாரு!.. விஜய் ஆண்டனிக்கு நடந்த சம்பவம்!.

cinepettai.com cinepettai.com

சினிமாவிற்கு வரும் நடிகர்களோ அல்லது இசையமைப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோ யாராக இருந்தாலும் அனைவரும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு சினிமாவிற்கு வருவதில்லை.

சிலர் சினிமாவிற்கு வந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள் உதாரணத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன்முதலாக எடுத்த படம் மாநகரம். மாநகரம் திரைப்படத்தை எடுக்கும்பொழுதுதான் ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை அவர் கற்றுக் கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அப்படியாகதான் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் சினிமாவிற்கு வந்தார். விஜய் ஆண்டனிக்கு உண்மையில் எப்படி இசையமைப்பது என்பது குறித்து சரியாக படித்தவர் கிடையாது. ஆனால் அவருக்கு சவுண்ட் இன்ஜினியரிங் என்கிற தொழில் தெரியும்.

இசையமைப்பாளர்களுக்கு எப்போதுமே ஒரு சவுண்ட் இன்ஜினியர் தேவை அப்படி சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிய வந்தவர்தான் விஜய் ஆண்டனி. வந்த சில நாட்களில் அவர் கற்றுக் கொண்ட கொஞ்ச நஞ்ச இசைகளை வைத்துக்கொண்டு சுக்கிரன் டிஷ்யூம் போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.

அதில் எல்லா பாடல்களுமே பெரும் ஹிட் கொடுத்தன. அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் வந்தன. இந்த நிலையில் அவருக்கும் ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கும் இடையே நட்பு இருந்தது. அப்போது சௌந்தர்யா தனது கணவர் தனுஷை விஜய் ஆண்டனிக்கு அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனுஷ் ஒரு பாடல் பாட வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு நீங்கள் இசையமைக்க முடியுமா என்று கேட்டு விஜய் ஆண்டனியுடன் தனுஷை கோர்த்து விட்டுள்ளார் சௌந்தர்யா.

விஜய் ஆண்டனிக்கு முழுமையாக இசையைப் பற்றி தெரியாது ஆனால் தனுஷ் சினிமாவில் பல காலங்கள் இருந்ததால் இசையை குறித்து கொஞ்சம் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார் அவர். நான்கு நாட்களாக விஜய் ஆண்டனியிடம் இசை குறித்து பல விஷயங்களை பேசியுள்ளார் தனுஷ். அவை பற்றி விஜய் ஆண்டனிக்கு ஒன்றுமே தெரியவில்லை.

இதனால் தனுஷ் வரும்போதெல்லாம் பயந்துள்ளார் விஜய் ஆண்டனி. ஒரு வழியாக தனுஷ் கேட்ட மாதிரியே இசையை செய்து கொடுத்தாலும் கூட தனுஷ் விஜய் ஆண்டனிக்கு இசை குறைவாகதான் தெரியும் என்பதை கண்டுபிடித்துவிட்டார். இந்த விஷயத்தை விஜய் ஆண்டனியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

POPULAR POSTS

ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
pugazh vengatesh bhatt
To Top