எனக்கு இதய பிரச்சனை வந்தப்ப அதை செஞ்சான்!.. வெண்ணிற ஆடை மூர்த்திக்காக தேங்காய் சீனிவாசன் செய்த செயல்!..

thengai srinivasan vennira aadai murthy

சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி குணச்சித்திர வேடங்களில் கலக்க கூடியவர் தேங்காய் சீனிவாசன்.

நிஜ வாழ்க்கையில் பலருக்கும் நன்மைகள் செய்யும் நல்ல மனிதராக வாழ்ந்து வந்தார் தேங்காய் சீனிவாசன். நடிகர் சந்திரபாபு கடைசி காலத்தில் காசுக்கே வழியில்லாமல் குடிக்கு அடிமையாகி சுற்றி கொண்டிருந்தப்போது நடிகர் தேங்காய் சீனிவாசன் தான் அவருக்கு ஆதரவு அளித்து வந்தார்.

இந்த நிலையில் தேங்காய் சீனிவாசனும் வெண்ணிற ஆடை மூர்த்தியும் ஆரம்பம் முதலே நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். காசேதான் கடவுளடா மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஒருமுறை இதயம் தொடர்பான கோளாறு வந்து அதனால் பாதிப்புக்கு உள்ளானார் வெண்ணிற ஆடை மூர்த்தி. இந்த விஷயம் தேங்காய் சீனிவாசனின் காதுக்கு சென்றது. உடனே நேரில் வந்து வெண்ணிற ஆடை மூர்த்தியை சந்தித்தார் தேங்காய் சீனிவாசன்.

பெருமாள் மீது பெரும் பக்தி கொண்ட அவர் உடனடியாக திருப்பதி கோவிலுக்கு வெண்ணிற ஆடை மூர்த்திக்காக வேண்டிக்கொண்டு நடந்தே பாதையாத்திரை சென்றார். திருப்பதி சென்றுவிட்டு வந்த தேங்காய் சீனிவாசன் உனக்கு ஒன்னும் ஆகாது. நான் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன் என கூறியுள்ளார்.

இதனை வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.