இலங்கையில் லியோ படம் வெளியாக கூடாது!.. எங்க போராட்டத்துக்கு மதிப்பு குடுங்க!.. விஜய்க்கு வந்த கடிதம்
பீஸ்ட் திரைப்படம் தயாரான போதே விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் அதிகமாக காத்திருந்த திரைப்படம் விஜய் நடிக்கும் லியோ. வாரிசு திரைப்படத்திற்கு கூட விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் லியோ படத்தை மலையளவு நம்பி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
ஏனெனில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து உருவான மாஸ்டர் திரைப்படம் சிறப்பான வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து லியோ எப்படியும் அதனை தாண்டிய ஒரு வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் லியோ திரைப்படம் உருவாகி நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி லியோ திரைப்படத்தை இலங்கையில் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் இலங்கையில் இருந்து விஜய்க்கு ஒரு கடிதம் வந்தது.
அதில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணன் ராஜாவுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது. உங்களுக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருக்கின்றனர். முக்கியமாக இளைஞர்கள் பெரும்பாலானோர் உங்கள் ரசிகராக இருப்பதால் அவர்கள் திரைப்படம் வெளியானால் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
இதனால் எங்களுக்கு போராட்டம் பின்னடைவை சந்திக்கும் எனவே வெளியீட்டு தேதியை இலங்கையில் மாற்றி வைக்கவும் என்று கேட்டுக் கொண்டு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.