ட்ரெயினில் நின்றுக்கொண்டே ஷூட்டிங் சென்ற பிரபு!.. காலில் விழுந்த தயாரிப்பாளர்..

தமிழில் தந்தை மூலமாக சினிமாவிற்கு வந்த நடிகர்களில் நடிகர் பிரபுவும் முக்கியமானவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு தமிழ் சினிமாவில் கதாநாயகனாவதற்காக மிகவும் கஷ்டப்பட்டார்.

1982 ஆம் ஆண்டு வெளிவந்த கோழி கூவுது திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பிரபு. நடிகர் திலகத்தின் மகன் என்பதால் அவரை குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் பிரபு கிட்டத்தட்ட சிவாஜி கணேசன் போலவே நடித்ததால் அவருக்கு மக்கள் மத்தியில் குறைவாகவே வரவேற்பு கிடைத்தது.

இருந்தாலும் சினிமாவில் இதுவரை 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் பிரபு. நடிகர் திலகத்தின் மகன் என்றாலும் கூட அவரிடம் அதற்கான ஆடம்பரமே இருக்காது. இதுக்குறித்து தயாரிப்பாளர் சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் பிரபு கதாநாயகனாக வைத்து சின்ன மாப்பிள்ளை என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை இயக்கும்போது வெளியூர் செல்வதற்காக அனைவருக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக பிரபுவிற்கு போட்ட ட்ரெயின் டிக்கெட் மட்டும் புக் ஆகவில்லை.

ஆனால் மறுநாள் படப்பிடிப்பே பிரபுவை வைத்துதான் எடுக்கப்பட இருந்தது. இதனை அறிந்த பிரபு அந்த ரயிலிலேயே செகண்ட் க்ளாஸில் ஏறி ஷூட்டிங்கிற்கு வந்தார். அங்கும் அதிக கூட்டமாக இருந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த விஷயத்தை அறிந்த தயாரிப்பாளர் பிரபுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் பிரபு இதையெல்லாம் ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை என பேட்டியில் கூறியுள்ளார் தயாரிப்பாளர்!..