பத்து கம்பெனில வாய்ப்பு தரேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!.. திருப்பாச்சி நடிகருக்கு நடந்த சோகம்!..

ஒரு திரைப்படம் என்பது எப்போதும் அறிமுக நடிகருக்கு முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. ஏனெனில்தான் நடிக்கும் முதல் திரைப்படத்தின் வெற்றியை பொறுத்துதான் அவருக்கான வாய்ப்புகள் என்பதும் அமைகிறது.

ஆனால் சில நடிகர்களுக்கு தங்களது முதல் படம் பெரும் வெற்றியை கொடுத்தாலும் கூட அதற்குப் பிறகு பெரிதாக வாய்ப்புகளை பெறாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதனால் இப்படி ஏற்படுகிறது என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. இப்படி தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தவர்தான் நடிகர் பெஞ்சமின். நடிகர் பெஞ்சமின் தமிழில் காமெடி நடிகராக அறிமுகமானவர். திருப்பாச்சி திரைப்படம் இவருக்கு ஒரு முக்கிய உந்துதலாக இருந்தது திருப்பாச்சி படத்தில் விஜயின் நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பெஞ்சமின்.

திருப்பாச்சி திரைப்படம் வெளியான பிறகு தொடர்ந்து பத்து தயாரிப்பாளர் நிறுவனத்திலிருந்து லட்சக்கணக்கில் இவருக்கு அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பத்து நிறுவனங்களும் திரும்ப அவரை நடிக்க அழைக்கவே இல்லை. அதில் என்ன அரசியல் நடந்தது என்பது இன்னமும் பெஞ்சமினுக்கே தெரியவில்லை அதன் பிறகு சுத்தமாக வாய்ப்பை இழந்தவர் சினிமாவில் நடிக்கவே இல்லை என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்