கேட்ட அந்த ஒரு கேள்வியால் மணிரத்னம் திரைப்படத்தில் வாய்ப்பை இழந்த மோகன்!.. ஆனா கேள்வி கரெக்ட்டுதான்..

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். பெரும்பாலும் மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெறக் கூடியவை.

இதனால் தொடர்ந்து மணிரத்தினம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டம் முதலே மணிரத்தினம் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் பல நடிகர்கள் அவரது திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வந்தனர்.

இருந்துமே கூட மணிரத்தினம் அவருக்கு பிடித்த நடிகர்களை மட்டுமே அவரது திரைப்படங்களில் நடிக்க வைத்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் அஞ்சலி திரைப்படத்தில் நடந்த நிகழ்வு குறித்து நடிகர் மோகன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

மணிரத்தினம் திரைப்பட வாய்ப்பு:

அஞ்சலி திரைப்படத்தில் அஞ்சலியின் தந்தை கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் மோகனைதான் நடிக்க வைப்பதற்கு மணிரத்தினம் திட்டமிட்டுள்ளார். அந்த கதையை மோகனிடம் சென்று கூறிய பொழுது மாற்றுத்திறனாளியாக இருக்கும் அந்த குழந்தை தனியாக ஒரு அறையில் தங்க வைக்கப்படுவது நெருடலாக இருக்கிறது.

அந்த குழந்தை தனது தாய் தந்தையரோடு தானே இருக்க வேண்டும் என்று லாஜுக்காக ஒரு கேள்வி கேட்டிருக்கிறார் நடிகர் மோகன். ஆனால் அந்த காட்சியை வைத்துதான் படத்தில் நிறைய விஷயங்களை ப்ளான் செய்திருந்தார் மணிரத்தினம்.

அதனால் மோகனுக்கு பதிலாக அந்த திரைப்படத்தில் ரகுவரனை நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்தினம். கேட்ட ஒரு கேள்வியின் காரணமாக அந்த படத்தில் வாய்ப்பை இழந்திருக்கிறார் நடிகர் மோகன்.