Connect with us

தயாரிப்பாளர் செய்த அலப்பறையால் பட வாய்ப்பை இழந்த சரத்குமார்!.. கடைசியில் அர்ஜுன் நடிச்சி ஹிட்!.

director shankar sarathkumar

Cinema History

தயாரிப்பாளர் செய்த அலப்பறையால் பட வாய்ப்பை இழந்த சரத்குமார்!.. கடைசியில் அர்ஜுன் நடிச்சி ஹிட்!.

Social Media Bar

Sarathkumar Arjun : தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட்டில் படம் எடுத்து பெரிய வெற்றியை கொடுக்கும் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர் பெரும்பாலும் சங்கர் இயக்கம் திரைப்படங்களுக்கு தென்னிந்திய சினிமாவில் அதிக வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருப்பதுண்டு.

ஏனெனில் பெரிய பட்ஜெட் என்பதையும் தாண்டி அவரது திரைப்படங்களில் சமூகம் சார்ந்த ஏதாவது ஒரு விஷயம் பேசப்பட்டிருக்கும். மேலும் அவரது திரைப்படங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெறக்கூடியவை. அந்நியன், சிவாஜி மாதிரியான திரைப்படங்கள் வெளியான காலகட்டத்தில் ஷங்கருக்கு இருந்த மதிப்பே தனி என்று கூறலாம்.

director shankar
director shankar

ஷங்கர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் ஜென்டில்மேன் திரைப்படம் கூட அரசியல் பேசும் ஒரு திரைப்படமாகதான் இருந்தது. இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சரத்குமார்தான். சரத்குமாருக்கு தகுந்தார் போல ஏற்கனவே திரைக்கதை முதல் எல்லாமே எழுதப்பட்ட நிலையில் திடீரென சரத்குமாருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

விலகிய சரத்குமார்:

இதனை அடுத்து அந்த திரைப்படத்திலிருந்து விலகினார் சரத்குமார். இது ஷங்கருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. படத்தின் மொத்த காட்சிகளையும் சரத்குமாரை வைத்து கற்பனை செய்து இருந்தார் ஷங்கர். இந்த நிலையில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஒரு குழப்பத்தில் இருக்கும் பொழுதுதான் பக்கத்து திரையரங்கில் அர்ஜுன் நடித்த ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

sarathkumar
sarathkumar

அதனை சென்று பார்த்த ஷங்கர் அர்ஜுன் ஓரளவு இந்த திரைப்படத்திற்கு சரியாக இருப்பார் என்று முடிவு செய்தார். பிறகு அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் பெரும் வெற்றியை கொடுத்தது. ஆனால் சரத்குமார் அப்படிப்பட்ட பெரும்படத்தின் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். ஒருவேளை சரத்குமார் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் முதல்வன் திரைப்படத்திலும் நடிப்பதற்கு சரத்குமாருக்கு வாய்ப்பு கிடைத்து இருந்திருக்கும்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top