Hollywood Cinema news
முஃபாசா மட்டுமில்லை அவர் பேரனும் வரான்!.. லயன் கிங் அடுத்த பாகத்தில் காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ்!..
பல காலங்களாகவே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் ஒரு கதைதான் லயன் கிங். ஆப்பிரிக்காவில் ஒரு காட்டில் ராஜாவாக இருந்து வரும் முஃபாசா என்னும் சிங்கத்தை வைத்து இந்த திரைப்படம் செல்லும். முஃபாசா இறப்பிற்கு தானே காரணம் என நினைக்கு அதன் மகன் சிம்பா காட்டை விட்டு ஓடிவிட முஃபாசாவின் அண்ணன் அந்த அதிகாரத்தை கைப்பற்றி கொடுங்கோல் ஆட்சி செய்வான்.
பிறகு சிம்பா ஆட்சியை பிடிப்பதே கதையாக இருக்கும். இந்த நிலையில் இது லைவ் ஆக்ஷன் படமாக வந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்சமயம் சிம்பாவின் அப்பாவான முஃபாசாவின் கதையை படமாக்கும் வகையில் முஃபாசா என்னும் பெயரில் ஒரு படம் வரவிருக்கிறது.
சமீபத்தில் அதன் ட்ரைலர் கூட வெளிவந்திருந்தது. இந்த நிலையில் சிம்பாவின் மகனான கியானின் கதையும் இந்த படத்தில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்பாவை விட ஒரு மாஸ் கதாபாத்திரமாக கியான் வரவிருக்கிறது.
சிம்பாவின் மகன்:
காட்டில் பல காலங்களுக்கு முன்பு லயன் கார்ட் என்கிற ஒரு அமைப்பு இருந்தது. அவர்களுக்கு அதீத சக்தி உண்டு. ஆனால் காலப்போக்கில் அவர்கள் காணாமல் போகின்றனர். இந்த நிலையில் அந்த சக்தி கியானுக்கு கிடைக்கிறது. இதனை தொடர்ந்து ரோர் ஆஃப் த எல்டர்ஸ் என்கிற சக்தி கியானுக்கு கிடைக்கிறது.
கியான் ஒருமுறை கர்ஜித்தால் அதில் அவனது மூதாதையர்களின் கர்ஜனையும் சேர்ந்து கேட்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை முஃபாசாவில் காட்டுவதன் மூலம் கியானுக்கு ஒரு படத்தை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது டிஸ்னி நிறுவனம்.