Latest News
நீங்க எல்லாம் விஜய்யை எப்படி பாக்குறீங்களோ ஒரிஜினல் விஜய் அப்படி கிடையாது!.. வெளிப்படையாக கூறிய சித்தார்த்!..
Actor Siddharth: தற்சமயம் வந்த சித்தா திரைப்படம் நடிகர் சித்தார்த்திற்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் அப்பாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு அறிவு முதிர்ச்சி இருக்க வேண்டும். இளம் நடிகர்கள் எல்லாம அவ்வளவு எளிதாக அப்பா மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து விட முடியாது.
சித்தார்த்தும் கூட வெகு நாட்களாக சாக்லேட் பாய் போல காதல் திரைப்படங்களாகதான் நடித்து வந்தார். பிறகு தற்சமயம் கொஞ்சம் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சித்தார்த். அப்படியாகதான் அவருக்கு சித்தா திரைப்படமும் அமைந்துள்ளது.
சித்தா திரைப்படத்தில் சித்தப்பா கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார் சித்தார்த். இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்திலேயே அவரை பாராட்டி பேசியிருக்கிறார் விஜய். உண்மையில் விஜய்க்கும் நடிகர் சித்தார்த்துக்கும் இடையே நல்ல நட்பும் இருந்துள்ளது.
இதுக்குறித்து சித்தார்த் கூறும்போது விஜய்யை நேரில் சந்திக்கும்போதெல்லாம் அவரை நான் விஜய் என பெயரை சொல்லிதான் அழைப்பேன். அவரும் என்னை சித்தார்த் என சகஜமாக பேசுவார். ஆனால் பொதுவில் நான் விஜய்யை பற்றி பேசும்போது அவரை விஜய் சார் என கூற வேண்டும் என்பார்கள்.
உண்மையில் விஜய் மிகவும் சிம்பிளான ஆள். நீங்கள் நினைப்பது போன்ற ஆள் விஜய் கிடையாது என கூறியுள்ளார் சித்தார்த்.