Latest News
குக் வித் கோமாளிக்கு டஃப் கொடுக்கும் சன் டிவி!.. களத்தில் இறங்கும் வடிவேலு!.. என்னப்பா சொல்றீங்க!..
விஜய் டிவியில் அதிகமான பார்வையாளர்களை கொண்ட இரண்டு நிகழ்ச்சிகள் உண்டு. அதில் ஒன்று பிக்பாஸ் மற்றொன்று குக் வித் கோமாளி. கடந்த ஐந்து வருடங்களாகவே மக்கள் மத்தியில் எதிர்பார்த்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தி வெற்றிநடை போட்டு வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
விஜய் டிவிக்கு நிறைய ஆடியன்ஸை கொண்டு வருவது மட்டுமில்லாமல் அதில் குக்காகவும் கோமாளியாகவும் வரும் நபர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க காரணமாக இருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
எந்த ஒரு நிகழ்ச்சி புதிதாக வந்தாலும் அதே போல வேறு நிகழ்ச்சிகள் போட்டிக்கு வருவது சின்னத்திரையில் வழக்கமாக நடக்கும் விஷயமாகும். அந்த வகையில் தற்சமயம் சன் டிவியும் களத்தில் குதித்துள்ளது. இதற்காக விஜய் டிவியில் இருந்த வெங்கடேஷ் பட்டை சன் டிவி தன் பக்கம் இழுத்துள்ளது.
இந்த நிலையில் டாப் குக் டூப் குக் என்கிற நிகழ்ச்சியை சன் டிவி விரைவில் ஒளிப்பரப்பு செய்ய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் இருக்கிறார். அதுக்குறித்த ப்ரோமோ நேற்று வெளியானது. விஜய் டிவியை சேர்ந்த தீனா, சூப்பர் சிங்கர் பரத், ஜிபி முத்து, தீபா இன்னும் பலரும் இந்த நிகழ்ச்சியில் இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்த ட்ரைலரில் வெங்கடேஷ் பட் கூறும்போது ஒரு செஃப்பும் ஒரு செலிபிரிட்டியும் இவர்களை மேய்க்க போகிறோம் என கூறியிருந்தார். அந்த செலிபிரிட்டி வேறு யாரும் அல்ல வைகை புயல் வடிவேலுதான் என தகவல்கள் வந்துள்ளன.
வடிவேலு இந்த நிகழ்ச்சிக்கு வரும் பட்சத்தில் குக் வித் கோமாளியை இந்த நிகழ்ச்சி ஓரம் கட்டுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.