ஐயா உங்க தகுதிக்கு இந்த விருதெல்லாம் வேண்டாம்! – சிவாஜி கைக்கு வந்த விருதை தடுத்த கமல்ஹாசன்!- என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கெல்லாம் ஒரு இமயம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்தான். தமிழில் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் நடிகர் சிவாஜி கணேசன்.

ஆனால் அவரது காலகட்டத்தில் அவருக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை. அப்போது அவருக்கு போட்டி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் கூட தேசிய விருது பெற்றுள்ளார் ஆனால் சிவாஜி கணேசன் எந்த ஒரு தேசிய விருதும் பெற்றதில்லை.

உண்மையில் சிவாஜி கணேசன் இந்த விருதுகளை பெரிய விஷயங்களாக பார்த்ததே கிடையாது. மக்கள் அவருக்கு அளிக்கும் அங்கீகாரத்தையே அவர் பெரும் விருதாக பார்த்தார். இந்த நிலையில் ஒருமுறை கைக்கு தேசிய விருது வந்தும் அதை சிவாஜி கணேசன் வாங்காமல் போன நிகழ்வும் நடந்தது.

1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனும் கமல்ஹாசனும் இணைந்து நடித்த தேவர் மகன் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு துணை கதாபாத்திரம்தான் என்றாலும் அதிலும் சிறப்பாக அவரது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

ஆனால் நடிப்பில் தன்னைவிட சிறப்பான நடிகரான சிவாஜி கணேசனுக்கு துணை கதாபாத்திரத்திற்கான தேசிய விருது வழங்குவது கமலஹாசனுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே கமல்ஹாசன் சிவாஜி கணேசனிடம் சென்று ஐயா இந்த விருது உங்களுக்கு உகந்ததல்ல எனவே அதை வாங்க வேண்டாம் எனக் கூறிவிட்டார்.

சிவாஜி கணேசனும் விருதின் மேல் பெரிதாக ஆர்வம் இல்லாதவர் என்பதால் கமல்ஹாசன் சொன்னபடியே அந்த விருதை வாங்காமல் விட்டுவிட்டார். ஆனால் உண்மையில் எந்த ஒரு விருதையும் வாங்காவிட்டாலும் கூட மக்கள் மத்தியில் சிவாஜி கணேசனுக்கான அங்கீகாரம் இப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.