என்னங்க நடிக்காத படத்துக்கு அவார்ட் வாங்குறீங்க!.. மேடையில் அவமானப்பட்ட சிவக்குமார்!.. கஷ்டம்தான்!..
சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆருக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களாக யார் தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்க போகிறார்கள் என்கிற கேள்வி பல காலங்களாக சினிமாவில் இருந்து வந்தது. அந்த சமயத்தில் அதற்கு விடையாகதான் நடிகர் ஜெய் சங்கரும், சிவக்குமாரும் வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் சினிமாவில் வந்த ஆரம்பத்தில் எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்தன. ஆனால் சினிமாவிற்கு நடிகர் சிவக்குமார் அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. தன்னுடைய இளம் வயதிலேயே சினிமாவில் வாய்ப்புகளுக்காக காத்திருந்தாலும் கூட வெகு காலங்களாக அவருக்கு வாய்ப்புகளே கிடைக்காமல்தான் இருந்தன.
இந்த நிலையில் அவருக்கு ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் தான் அந்த வாய்ப்பை கொடுத்தார். அந்த படத்தில் நடித்தால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக கே.எஸ் கோபாலக்கிருஷ்ணன் கூறினார்.
சரி என சிவக்குமாரும் அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் சிஅல் நாட்களுக்கு பிறகு வந்த இயக்குனர் அந்த படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடிக்கிறார். ஆனால் உங்களுக்கும் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது என கூறியுள்ளார்.
சிவக்குமாருக்கு நடந்த அவமானம்:
பிறகு படப்பிடிப்புக்கு வந்தப்போது சிவக்குமாருக்கு மொத்தமே 4 காட்சிகள்தான் இருந்தனவாம். மேலும் ஒரு பாடல் இருந்ததாம். பணமா பாசமா என்கிற அந்த படம் வெளியானப்போது அந்த நான்கு காட்சிகளையாவது பார்க்கலாம் என ஆசையாக சென்ற சிவக்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஆமாம் அந்த படத்தில் அவரது காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஒரு வருடம் கழித்து ஒரு படத்தின் விருது வழங்கும் விழாவிற்கு சிவக்குமாரை அழைத்துள்ளனர். அது என்ன படம் என்றே தெரியாமல் சிவக்குமாரும் சென்றிருக்கிறார்.
அப்போது பணமா பாசமா படத்தின் வெற்றி விழா நடந்துக்கொண்டிருந்தது. அதில் சிவக்குமாரையும் அழைத்து விருது வழங்கியுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்தவர்கள் சிவக்குமார்தான் அந்த படத்திலேயே இல்லையே அவருக்கு ஏன் விருது தருகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்படி அவமானத்தை சந்தித்திருக்கிறார் சிவக்குமார்.