வேலை பார்த்த 1300 பேருக்கும் சம்பளம் தரலை.. நியாயமா இது!. கடுப்பில் இருக்கும் லியோ நடனக் குழு!..

கூட்டமாக ஆட்களை வைத்து திரைப்படத்தில் காட்சிகளை வைப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படி ஒரு காட்சியை வைப்பது என்பது கொஞ்சம் கடுமையான விஷயம்தான் என்றாலும் கூட அது திரைப்படத்தில் வரும் பொழுது ஒரு பிரம்மாண்டத்தை கொடுக்கிறது என்பதால் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் இந்த மாதிரியான காட்சிகளை பார்க்க முடிகிறது.

விக்ரம் திரைப்படத்தில் கூட கடைசி காட்சியில் சூர்யா பேசும் பொழுது ஒரு பெரிய ரவுடி கூட்டம் அதை கேட்டுக்கொண்டு நிற்பது போல இருக்கும். அதற்காக பல்வேறு ஜூனியர் ஆர்டிஸ்ட்களை கொண்டு வந்திருப்பார் லோகேஷ் கனகராஜ். தற்சமயம் லியோ திரைப்படத்திலும் அப்படியான ஒரு விஷயத்தை செய்திருந்தார்.

நான் ரெடிதான் வரவா என்கிற பாடலுக்காக மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி இருந்தார் லோகேஷ் கனகராஜ். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் இந்த ஒரு பாடலுக்காக மட்டும் நடிக்க வந்திருந்தனர். மூன்று நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு சென்றது.

ஆனால் நடித்தவர்களுக்கு இன்னமும் சம்பளமே வழங்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் நடித்த ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கூறும் பொழுது இன்னும் மூன்று நாட்களில் எங்கள் 1300 பேருக்கும் சம்பளம் தரவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என்று அந்த நடன கலைஞர்கள் கூறியுள்ளனர். படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படியான ஒரு செய்தி அதிக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.