45 வயதில் விவகாரமான பாடல்… தாறு மாறாக நடிகை கிரண்..!

ஜெமினி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில்  கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தது. தொடர்ந்து பெரிய நடிகர்கள் படத்தில் கூட நடித்தார்.

ஆனால் உடல் பருமன் என்பது நடிகைகளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. உடல் எடை அதிகரிக்கும் பெண்களுக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நிறைய நடிகைகள் இப்படி தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

அப்படியாக வாய்ப்பை இழந்த ஒரு நடிகையாக மாறியிருப்பவர் நடிகை கிரண். நடிகை கிரணுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு வாய்ப்புகள் என்பதே கிடைக்காமல் போனது. இந்த நிலையில் தொடர்ந்து வீடியோ கால் சேவை ஒன்றை இவர் துவங்கி வைத்தார்.

இதற்காக தனி வெப்சைட் ஒன்றையும் வைத்துள்ளார் கிரண். இதன் மூலமாக அவர் ரசிகர்களுடன் கால் செய்து பேசுவார் அதற்கு பணம் வசூலிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கவர்ச்சி பாடல்களில் நடிப்பதற்கு கூட ஓ.கே என்கிற மனநிலைக்கு வந்துள்ளார் கிரண். சமீபத்தில் அப்படியாக ஒரு பாடலில் அவர் நடனமாடி இருக்கிறார். அந்த பாடலில் டைட்டான உடை அணிந்து அதிக கவர்ச்சியாக இவர் நடனமாடி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் அந்த வீடியோவுக்காகதான் ரசிகர்கள் இப்போது காத்து கொண்டுள்ளனர்.