என் வாழ்க்கையை காலி பண்ண படம்… நடிகை மந்த்ரா வாழ்க்கையில் விளையாடிய தெலுங்கு இயக்குனர்.. அட கொடுமையே..!

Actress Mantra has been a prominent actress in Tamil for a long time. But within a few years, he did not get opportunities in cinema.

சினிமாவில் கதாநாயகிகளை பொருத்தவரை அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திரைப்படமும் முக்கியமானதாக இருக்கிறது. தவறான பிம்பத்தை உருவாக்கும் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டால் கூட அது அவர்களது சினிமா வாழ்க்கையவே மோசமாக்கிவிடும்.

இப்படி சினிமாவில் வாழ்க்கையை இழந்த நடிகைகள் பலர் உண்டு அப்படியான நடிகைகளில் நடிகை மந்த்ராவும் ஒருவர். மந்த்ரா சினிமாவில் அறிமுகமான பொழுது அவருக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. சொல்ல போனால் அப்போது பிரபலமான நடிகர்களாக இருந்த அஜித் மாதிரியான பெரிய நடிகர்களுக்கே ஜோடியாக நடிதார் மந்த்ரா.

சினிமாவில் வாய்ப்பு:

அதே சமயம் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது தெலுங்கு சினிமாவை பொருத்தவரை அப்போதே கவர்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் தான் அங்கு அதிகம் இருந்தாலும் கூட அங்கும் சென்று நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் மந்த்ரா.

actress manthra
actress manthra

இந்த நிலையில் திடீரென்று அவர் சினிமாவில் சரிவை காண தொடங்கினார். அவருக்கு வாய்ப்புகளே கிடைக்காமல் போனது இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் கிடைத்தால் கூட போதும் என்று நடிக்க தொடங்கினார்.

பிறகு மொத்தமாக சினிமாவில் இருந்து அவர் காணாமல் போய்விட்டார் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்பொழுது எதனால் சினிமா வாழ்க்கை அவருக்கு மோசமானது என்பது குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நான் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சென்றேன்.

அந்த ஒரு படம்:

அந்த தெலுங்கு படத்தில் வில்லனுக்கு ஜோடி கதாபாத்திரம் தான் என்னுடையது என்று கூறினார்கள். ஆனால் அந்த கதாபாத்திரம்தான் மொத்த படத்திற்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும் கூறினார்கள் எனவே நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன்.

actress manthra

ஆனால் படப்பிடிப்பு துவங்கிய பிறகு அந்த கதாபாத்திரத்திற்கான நடிப்பு எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே நான் இயக்குனரிடம் சென்று இந்த படத்தில் இருந்து வெளியேறிக் கொள்கிறேன் என்று கூறினேன். ஆனால் அவர் அட்வான்ஸ் தொகை எல்லாம் வாங்கி விட்டீர்கள் இப்பொழுது படத்தில் இருந்து விலகி வெளியேறினால் உங்களது பெயர் கெட்டுவிடும் என்று கூறினார்.

சரி என்று நானும் அந்த படத்தில் நடித்து கொடுத்தேன். ஆனால் அந்த படத்தில் நடித்த அந்த கதாபாத்திரம் தான் சினிமா வாழ்க்கையை எனக்கு கெடுத்து விட்டது அதற்கு பிறகு எனக்கு வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது என்று கூறுகிறார் மந்த்ரா.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version