16 வயதிலேயே என்னை டார்ச்சர் பண்ணுனார் நகுல்!.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் மிக சிறு வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி வரவேற்பை பெற்றவர்களாவர். சில நடிகைகள் எல்லாம் 13 அல்லது 14 வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளனர்.

அப்படி தமிழ் சினிமாவில் குறைவான வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

திரைப்பட அறிமுகம்:

காதலில் விழுந்தேன் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் அந்த படத்திற்கு பிறகு நகுல் சுனைனா இருவருக்குமே வரவேற்புகள் கிடைத்து வந்தன.

அதன் பிறகு அவர்கள் இருவருமே காம்போ போட்டு மாசிலாமணி என்னும் படத்திலும் நடித்தனர். இந்த இரு படங்களிலுமே படத்தில் வரும் பாடல்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்தன. இந்த நிலையில் காதலில் விழுந்தேன் திரைப்பட அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகை சுனைனா.

16 வயதில் நடந்த சம்பவம்:

அதில்  அவர் கூறும்போது காதலில் விழுந்தேன் படத்தில் நடிக்கும்போது எனக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. அதனை தொடர்ந்து எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் எப்போதும் அமைதியாகதான் இருப்பேன்.

ஆனால் நான் அமைதியாக இருப்பது நகுலுக்கு பிடிக்காது. அதனால் எப்போதும் என்னிடம் பேசி கொண்டே இருப்பார். எப்படியாவது என்னை சிரிக்க வைக்க வேண்டும் என என்னிடம் வந்து டார்ச்சர் செய்துக்கொண்டே இருப்பார். ஆனால் அது ஒரு அன்பு தொல்லைதான் என்கிறார் நகுல்.