இதயமே நொறுங்கி போயிட்டு… வருத்தத்தில் இருக்கும் சமந்தாவிற்கு ஆறுதல் கூறும் நெட்டிசன்கள்!.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை உலக அளவில் போட்டியாளர்கள் பங்கேற்க ஒலிம்பிக் நிகழ்ச்சி நடந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. பல வருடங்களாகவே ஒலிம்பிக் விளையாட்டு என்பது உலக அளவில் நடந்து வருகிறது.
இதில் அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்களும் கலந்து கொள்வது உண்டு ஒலிம்பிக் ஓர் தனித்துவமான விளையாட்டு போட்டி ஆகும். கிட்டத்தட்ட அதற்கு தேர்வு ஆகுவதற்காகவே முதலில் தேசிய அளவில் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கிறது.
ஒலிம்பிக் வீரர்:
அதனால் ஒலிம்பிக்கிற்கு வருகிற ஒவ்வொரு வீரர்களும் தனித்துவமானவர்கள் என்று கூறலாம். ஆனால் அவர்கள் அனைவருமே மெடல் ஜெயித்து விடுவது கிடையாது. எந்த நாடு அதிக ஒலிம்பிக் மெடல்களை வைத்திருக்கிறதோ அது பெரிய நாடாக பார்க்கப்படுகிறது.
இதில் வெகு வருடங்களாகவே ஜப்பான்தான் முன்னணிகளில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வருடம் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு துவங்கியது. இந்த முறை அது பாரிஸில் நடந்து வருகிறது. பொதுவாகவே ஒரு நாடு ஒலிம்பிக் நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்துவதை பெருமையாக கருதுகின்றன.
அந்த வகையில் பாரிசில் ஒலிம்பிக் நடந்தது. இதில் இந்திய வீரர் வினேஷ் போகத் மல்யுத்த வீரராக கலந்து கொண்டார். 50 கிலோ எடையுள்ள பிரிவினருக்கான மல்யுத்தத்தில் இவர் கலந்து கொண்டார். கலந்து கொண்டு தன்னுடைய சிறப்பான விளையாட்டை அதில் வெளிப்படுத்தி இருந்தார்.
சமந்தா பதிவு:
ஏற்கனவே இந்திய அளவில் நிறைய போட்டிகளில் வெற்றி பெற்றவர் வினேஷ் போகத் இந்த நிலையில் செமி பைனலிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியாக இறுதி ஆட்டத்திற்கு தேர்வானார் வினேஷ் போகத். இந்த நிலையில் அவர் 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகமாக இருக்கிறார் என்று கூறி அவரை தகுதி நீக்கம் செய்திருக்கிறது ஒலிம்பிக்ஸ் அமைப்பு.
மேலும் இறுதிப் போட்டியில் தோற்றவர்களுக்கு வழங்கும் வெண்கல பதக்கம் கூட வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். பா.ஜ.க பிரமுகர் பாலியல் பிரச்சனையை வெளியில் அம்பலப்படுத்தியவர் வினேஷ் போகத். எனவே இதுதான் அவரது தோல்விக்கு காரணமாக இருக்கும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
இதற்கு பதில் அளித்த வினேஷ் போகத் தாயே என்னை மன்னித்து விடுங்கள் மல்யுத்தம் என்னை வென்று விட்டது நான் அதனிடம் தோல்வி அடைந்து விட்டேன். உங்கள் கனவுகள் முடிந்து போய்விட்டது இனிமேல் இதை எதிர்த்து சண்டை போட எனக்கு சக்தி இல்லை என்று பதிவிட்டு இருந்தார். அதனை எடுத்து ஷேர் செய்த நடிகை சமந்தா நொறுங்கிய இதயம் எமோஜ் போட்டு அதை பகிர்ந்து இருக்கிறார்.