Connect with us

அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போன சமீரா ரெட்டி!.. ஹிந்தி அவங்க வாழ்க்கையில் விளையாடிட்டு!..

ajith sameera reddy

Cinema History

அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போன சமீரா ரெட்டி!.. ஹிந்தி அவங்க வாழ்க்கையில் விளையாடிட்டு!..

Social Media Bar

Actor Ajith : ஒரு நடிகையின் வாழ்க்கையை பொறுத்தவரை அவர்களின் சினிமா வாழ்க்கையையே மாற்றும் சக்தி பெரும் நடிகர்களின் திரைப்படங்களுக்கு உண்டு. பெரும் நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது கதாநாயகிகளுக்கு பெரிதான ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.

அதனை தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கும். அப்படியாக நடிகை சமீரா ரெட்டிக்கு அஜித்துடன் நடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே வாய்ப்பு கிடைத்தும் அவரால் நடிக்க முடியாமல் போன சம்பவம் நடந்திருக்கிறது.

2001 இல் நடிகர் அஜித் நடித்து பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் சிட்டிசன். சிட்டிசன் திரைப்படத்திற்கான கதாநாயகிகளுக்கான தேடல் நடந்த பொழுது முதலில் அவர்கள் தேர்ந்தெடுத்தது நடிகை சமீரா ரெட்டியைதான். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் சரவண சுப்பையாவிற்கு சிட்டிசன்தான் முதல் திரைப்படம்.

அவருக்கு சுத்தமாக ஹிந்தியே தெரியாது ஆனால் சமீரா ரெட்டிக்கு தமிழே தெரியாது. இந்தியும் ஆங்கிலமும் மட்டும் தான் தெரியும் இதனால் சமீரா ரெட்டியுடன் பேசுவது என்பதே இயக்குனருக்கு கடினமான விஷயமாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில் இவரை வைத்து எப்படி முழு படம் எடுக்க முடியும் என்று யோசித்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அந்த படத்தில் வரும் பூக்காரா பாடலை பாடுவதற்காக பாடகி வசுந்தரா தாஸ் வந்திருந்தார். அவர் ஏற்கனவே ஹே ராம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எனவே அவரிடம் பேசி அந்த திரைப்படத்தில் அவரை கதாநாயகி ஆக்கினார் இயக்குனர். கடைசியில் ஹிந்தி நடிகை என்பதால் சமீரா ரெட்டி அஜித்துடன் நடிக்கும் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top