
தமிழில் பல படங்களில் நடித்திருந்தும் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலமாகாமல் இருப்பவர் சாக்ஷி அகர்வால்.

ஏனெனில் இவர் நடித்த எந்த படத்திலும் பெரிய கதாபாத்திரம் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார்.

திருட்டு விசிடி, காதலும் கடந்து போகும், காலா போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருந்தார்.

குட்டி ஸ்டோரி,டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
சமீபத்தில் இவர் வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.
Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.