actress suvalakshmi

குடும்பத்துல நடந்த ஒரு இறப்பு.. வாழ்க்கையையே மாத்திடுச்சு.. நடிகை சுவலெட்சுமியின் அறியாத பக்கங்கள்.!

Actress Suvalakshmi is an actress who has received a lot of reception for her speed in Tamil cinema. But there is a story behind his coming to cinema

எல்லா நடிகைகளுக்கும் சினிமாவிற்கு வந்த உடனே பெரிதாக வரவேற்பு கிடைக்காது. இப்பொழுது சமூக வலைதளங்கள் போன்ற பல விஷயங்கள் நடிகைகளை பிரபலப்படுத்துவதற்காக இருக்கின்றன. அதன் மூலமாக சிலர் எளிதாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகின்றனர்.

ஆனால் இந்த சமூக வலைத்தளங்கள் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி என்பதே இல்லாத காலகட்டத்தில் கூட ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து அதன் மூலமே அதிக பிரபலமடைந்த நடிகைகள் உண்டு. உதாரணத்திற்கு காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்த நடிகை மீது அப்பொழுது பலருக்கும் ஈர்ப்பு இருந்தது.

அவருக்கு பெரிய ரசிக்கப்பட்டாளமே இருந்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து நடிக்கவில்லை அதேபோல்தான் சிட்டிசன் திரைப்படம். அந்த படத்தில் நடித்த நடிகையின் இந்த வரிசையில் நடிகை சுவலட்சுமியும் முக்கியமானவர். ஆசை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுவலட்சுமி.

நடிகை சுவலெட்சுமி:

முதல் திரைப்படமே சுவலட்சுமிக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது. யார் இந்த அழகான பெண் என்று ரசிகர்கள் அனைவரும் இவரை தேட துவங்கினார்கள். அதனை தொடர்ந்து சுவலட்சுமிக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் தமிழ் சினிமாவில் கிடைத்தது.

actress suvalakshmi

அப்படி வரவேற்பு இருந்த காலகட்டங்களில் கூட தொடர்ந்து நாகரீகமான உடையில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகை சுவலட்சுமி. அதேபோல சினிமாவில் பெரிதாக கிசுகிசுகளும் இல்லாத ஒரு நடிகையாக சுவலட்சுமி இருந்து வந்தார்.

இவர் சினிமாவிற்கு வருவதற்கு பின்னால் உள்ள கதை மிகவும் சோகமானது ஆகும். சுவலெட்சுமிக்கு ஒரு பத்திரிகையாளராக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. ஆனால் சுவலட்சுமியின் அண்ணன் அவர் ஒரு வக்கீல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனை தொடர்ந்து சுவலட்சுமி இயக்குனர் சத்யஜித் ரே திரைப்படங்களில் முதலில் பணிபுரிந்து வந்தார்.

சினிமாவிற்கு வந்த காரணம்:

தன்னுடைய அண்ணனின் ஆசைக்காக சட்டம் படிப்பதற்காக வந்தார் சுவலட்சுமி. இந்த சமயத்தில்தான் அவரது அண்ணன் ஒரு விபத்தில் உயிர் இழந்தார். அவரது உயிரிழப்புக்கு பிறகு அவரது குடும்பம் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.

actress suvalakshmi

இந்த நிலையில்தான் ஆசை திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு சுவலட்சுமிக்கு வந்தது. அப்போது இருந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஆசை திரைப்படத்திற்கு பிறகு பிரபலமான நடிகையாக மாறினார் சுவலட்சுமி ஆனாலும் கூட தனது அண்ணனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று மீண்டும் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்தார் சுவலட்சுமி.