Latest News
குணசேகரனுக்கும் ஜீவானந்தத்திற்கும் நேரடி மோதல்!.. திருவிழாவில் இருக்கு சம்பவம்!..
Ethir neechal sun TV: சின்னத்திரையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று வரும் நாடகமாக எதிர்நீச்சல் நாடகம் இருக்கிறது. எதிர்நீச்சல் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது ஆதி குணசேகரன் கதாபாத்திரம்தான்.
அந்த ஒட்டுமொத்த நாடகத்தையும் தூக்கி நிறுத்துவது அந்த கதாபாத்திரம்தான். முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். ஆனால் இடையில் அவர் எதிர்பாராத விதமாக காலமானதால் அவருக்கும் பதிலாக வேலராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.
வேலராம மூர்த்தி நடிக்க துவங்கியதிலிருந்து குணசேகரனின் கதாபாத்திரமே மொத்தமாக மாறி உள்ளது. மிகவும் உக்கிரமான ஒரு கதாபாத்திரமாக அது இருக்கிறது. இந்த நிலையில் நாடகத்தின் மற்றொரு பெரும் கதாபாத்திரமான ஜீவானந்தம் கதாபாத்திரத்தோடு ஆதி குணசேகரனுக்கு மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஜீவானந்தத்தின் மனைவியை ஆதி குணசேகரன் மற்றும் அவனது தம்பி இருவரும் இணைந்துதான் கொன்றனர் என்கிற செய்தி ஜீவானந்தத்திற்கு தெரிந்துவிட்டது. இதனை அடுத்து ஒரு திருவிழாவில் ஆதி குணசேகரனுக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே சண்டை நடக்க உள்ளது. அந்த திருவிழாவில் எப்படியும் ஒரு உயிர் போக போவதாக எனக்கு தோன்றுகிறது என குணசேகரனின் அம்மா கூறுகிறார். ஆனால் அது எந்த உயிர் என தெரியவில்லை.
வேலராமமூர்த்தி ஆதி குணசேகரனாக நடிப்பதால் இந்த சண்டை சுவாரசியமாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே சமயம் வேலராம மூர்த்திக்கு அதிகமாக திரைப்பட படப்பிடிப்புகள் இருப்பதால் ஜீவானந்தம் ஆதி குணசேகரன் கதையை முடிப்பது போல காட்சிகள் அமையவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.