Latest News
கேப்டன் மில்லர் படம் என்னோட கதை!.. கடுப்பான நடிகர் வேலராம மூர்த்தி!..
Captain miller: தமிழ் சினிமாவில் புத்தகங்களை நாவல்களை தழுவி திரைப்படங்கள் எடுப்பது என்பது எப்போதும் நடந்து வரும் விஷயம்தான். பொன்னியின் செல்வன், அசுரன், மாதிரியான பல படங்கள் தமிழில் இப்படி நாவலை தழுவி வந்துள்ளன.
ஆனால் அப்படியான தழுவல்கள் வரும்போதெல்லாம் அந்த நாவலை எழுதிய ஆசிரியரிடம் அனுமதி பெற்று அதை படமாக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயமாகும். மேலும் ஆசிரியர்களுக்கு அதற்கான ராயல்டி தொகையையும் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படமே எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாக கொண்டது என்ற ஒரு கருத்து உண்டு. இந்த நிலையில் தற்சமயம் தனுஷ் நடித்து வெளியாகியிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்து இது மாதிரியான சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியான திரைப்படமாகும். இந்த திரைப்படம் வெளியானப்போதே நல்ல எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து அந்த படத்திற்கான வரவேற்பும் அதிகரித்தது.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தை பொறுத்தவரை அதன் கதை தன்னுடைய நாவலின் தழுவல் என குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் வேலராம மூர்த்தி. வேல ராமமூர்த்தி ஒரு எழுத்தாளரும் ஆவார். ஒரு சில நாவல்களை இவர் எழுதியிருக்கிறார்.
இவர் எழுதிய பட்டத்து யானை என்கிற நாவலோடு தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் ஒத்து போவதாக குற்றம் சாட்டுகிறார் வேலராம மூர்த்தி. நாவலில் இருக்கும் பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன என கூறி இவர் நடிகர் பாக்கியராஜிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக பாக்கியராஜ் கேப்டன் மில்லர் படக்குழுவினரிடம் பேசி வருகிறார்.