தற்போது தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்படும் நடிகராக எஸ். ஜே சூர்யா இருக்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் பழமொழி திரைப்படங்களிலும் தற்போது நடித்து பிஸியாக இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் எஸ். ஜே. சூர்யா முன்னணி நடிகர்களை எல்லாம் விட பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அளித்துள்ள பேட்டையில் நான் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு கால்ஷீட் கொடுப்பதற்கு கூட எனக்கு நாட்கள் இல்லை என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் நானி மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் சூர்யாவின் சனிக்கிழமை என்ற திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் படத்தில் நடித்த அதிதி பாலன் எஸ்.ஜே. சூர்யா பற்றி சில கருத்துக்களை கூறியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் சனிக்கிழமை
தற்போது தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான நடிகராக இருப்பவர் நடிகர் நானி. இவரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் சூர்யாவின் சனிக்கிழமை.
இந்த படம் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்க உள்ளார். இவர் முன்னதாக நானின் நடிப்பில் வெளிவந்த அன்டே சுந்தரராகினி என்ற திரைப்படத்தை இயக்கியவர். மீண்டும் நானி வைத்து தெலுங்கில் சரி போதையா சனிவரம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் தான் தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை என்று வெளிவர இருக்கிறது.

இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன், நானி, அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் வெளியாகி எஸ். ஜே. சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய நிலையில் டிரெய்லரின் தொடக்கம் முதல் இறுதி வரை எஸ். ஜே. சூர்யாவின் பயங்கரமான நடிப்பு அனைவரையும் மிரட்டி உள்ளது.
எஸ்.ஜே. சூர்யாவை புகழ்ந்த அதிதி பாலன்
இந்நிலையில் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய நடிகை அதிதி பாலன், எஸ்.ஜே சூர்யாவை பற்றி சொல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை.
அவரின் நடிப்பை பற்றி அனைவருக்குமே தெரியும். மேலும் இந்த படத்தில் அவருடைய நடிப்பு எல்லா காட்சிகளிலுமே அருமையாக இருந்தது. ஆனால் அவருடன் எனக்கு எந்த கட்சியும் அமையவில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.