நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவர். அவர் நடித்த காக்கா முட்டை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்க துவங்கின. இந்த நிலையில் நயன் தாரா மாதிரியே ஐஸ்வர்யா ராஜேஷும் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
ஆனால் அப்படி அவர் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் தமிழில் பெரிதாக வரவேற்பை தரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கில் பொங்கலை முன்னிட்டு மூன்று திரைப்படங்கள் வெளியானது. அதில் கேம் சேஞ்சர் திரைப்படம் படத்திற்கு போட்ட தொகையை கூட பெற்று தரவில்லை. அதே போல நடிகர் பாலகிருஷ்ணா நடித்த டாக்கு மகாராஜ் திரைப்படமும் 100 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
ஆனால் இதையெல்லாம் தாண்டி கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் லாபம் தந்துள்ளது சங்கராந்தி கி வஸ்தனம் எனகிற திரைப்படம். இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இதனால் அதிகமாக வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.