Latest News
18 வருஷம் கழிச்சி தன் படத்தில் மீண்டும் அதை செய்யும் அஜித்!.. இந்த வாட்டியாவது வெற்றி கை கூடுமா?..
Ajith: சினிமாவிற்கு வரும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு சில ஆசைகள் இருக்கும். கண்டிப்பாக எல்லா நடிகர்களும் ஒருமுறையாவது போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து விடுவார்கள். அதே போல இரட்டை வேடத்தில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விடுவார்கள்.
முக்கியமாக இரட்டை வேடத்தில் நடிக்கும் போது ஒருவர் கதாநாயகனாகவும் மற்றொரு கதாபாத்திரம் வில்லனாகவும் நடிப்பது என்பது சவாலான விஷயம். சத்யராஜ் மாதிரியான சில நடிகர்களுக்கு அது கைகூடி வந்தாலும் விஜய் மாதிரியான நடிகர்களுக்கு அது கை கூடியது கிடையாது.
ஆனால் அஜித்திற்கு வாலி திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தது நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படமாகும். இதில் மிக அரிதாகவே மூன்று வேடங்களில் கதாநாயகன் நடிக்கும் படங்கள் வெளி வருகின்றன.
அந்த வகையில் அஜித் நடித்த திரைப்படம் வரலாறு. 2006 ஆம் ஆண்டு வெளிவந்த வரலாறு திரைப்படத்திற்கு முதலில் காட்பாதர் என்று தான் பெயரிடப்பட்டிருந்தது. இந்த படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான பிறகு பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் தற்சமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்திலும் மூன்று கதாபாத்திரங்களில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது கிட்டதட்ட 18 வருடங்கள் கழித்து மீண்டும் மூன்று வேடங்களில் நடிக்கிறார் அஜித்.
இந்த திரைப்படத்தின் பெயரும் ஆங்கிலத்தில் இருப்பதால் வரலாறு திரைப்படத்தை போல இதுவும் தோல்வி கண்டு விடுமோ என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் அஜித் ரசிகர்களை பொறுத்தவரை இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.