ஆப்ரேஷன் அப்பக்கூட மனைவியுடன் இருக்க முடியலை.. கோடிகளில் சம்பாதித்தும் அஜித்திற்கே இந்த நிலைமையா?..

 அஜித் நடித்து வரும் திரைப்படங்களில் வலிமை திரைப்படம் போலவே ஒரே இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது விடாமுயற்சி திரைப்படம். படப்பிடிப்பு துவங்கப்பட்ட காலகட்டம் முதலே ஏகப்பட்ட இழுப்பறி  காரணமாக தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் அஜித் வெளிநாட்டுக்கு பயணம் செல்கிறேன் என்று படபிடிப்பை தவித்துவிட்டு சென்றார். பிறகு அஜித் வந்த பிறகு ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று படப்பிடிப்பு எடுப்பதில் பிரச்சனைகள் இருந்தன. இதற்கு நடுவே பிறகு லைகா நிறுவனம்.

படப்பிடிப்பில் தாமதம்:

நிதி பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால் படத்தை எடுப்பதில் பிரச்சனைகள் உண்டானது. இப்படியே பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் பிறகு பாதியிலேயே விடாமுயற்சி திரைப்படத்தை விட்டு குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு நடிக்க சென்று விட்டார் அஜித்.

ajith

இந்த நிலையில் இன்னும் ஒரு 40 நாட்கள் தொடர்ந்து கொடுத்தால் விடாமல் படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவேன் என்று இயக்குனர் கூறிய நிலையில் திரும்ப ஒரு 40 நாளை விடாமுயற்சி படத்திற்காக ஒதுக்கியிருக்கிறார் அஜித்.

மனைவிக்கு பிரச்சனை:

இந்த நிலையில் சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அஜித்தின் மனைவியான ஷாலினிக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ajith

ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்ததால் அஜித்தால் மனைவியை நேரில் வந்து பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி வீட்டுக்கு வந்து விட்டாராம் ஷாலினி.

பிறகு அவரை பார்க்க அஜித் வந்திருக்கிறார் இப்படி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தும் கூட தன்னுடைய மனைவியை பார்க்க வர முடியாத ஒரு சூழ்நிலையில் இருந்துள்ளார் அஜித்.