தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகள் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடிக்கும். அந்த வகையில் காதல், நட்பு, அரசியல் வரலாற்று நிகழ்வுகள், அமானுஷ்யங்கள் நிறைந்த கதைகள், கடவுள் படங்கள் போன்ற பல வித்தியாசமான கதைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் படமாக்கப்பட்டு வரும்.
இந்நிலையில் சமீப காலங்களாக மக்களுக்கு ஹாரர் திரைப்படங்கள் மீது மோகம் அதிகரித்து உள்ளது. இதன் விளைவாக தமிழில் ஒரு ஹாரர் திரைப்படம் வந்தால் அந்த திரைப்படத்தின் மற்ற பாகங்கள் வரிசையாக வெளியாகி தற்போது அதை ஒரு ட்ரெண்டிங்காக மாறியுள்ளது
இந்நிலையில் தமிழில் வெளிவந்த அனைவருக்கும் பிடித்த ஆல் டைம் ஹாரர் பேய் திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வா அருகில் வா

திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ராஜா, வைஷ்ணவி, எஸ் எஸ் சந்திரன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் சொத்து கிடைக்கும் என்ற ஆசையில் தன் மகன் காதலித்த பெண்ணை மணமுடித்து வைக்கிறார் பண்ணையார். இந்நிலையில் மருமகள் கருவுற்று வளைகாப்பு நடக்கும் நேரத்தில் அந்த மருமகளின் சொத்துக்கள் மீதான சாதகமான தீர்ப்பு அப்பாவிற்கு வரவில்லை இதனால் மருமகளின் அப்பா இறந்து போகிறார்.
சொத்து இல்லாத மருமகளை கொலை செய்ய திட்டமிட்டு இறுதியாக பண்ணையாரும் அவரின் மனைவியும் கொலை செய்து விடுகிறார்கள். மேலும் மகனிடம் உன் மனைவி ஓடிவிட்டால் எனக்கூறி அவரை நம்ப வைத்து, இரண்டாவதாக திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்நிலையில் முதல் மனைவியின் ஆவி அவள் வைத்திருக்கும் ஒரு பொம்மையின் மீது புகுந்து தன்னை கொலை செய்தவர்கள் அனைவரையும் கொலை செய்கிறது .இறுதியாக தன்னை சந்தேகப்பட்ட கணவனையும் கொலை செய்ய முயலும் போது, இரண்டாவது மனைவியின் தெய்வ சக்தி கொண்டு கணவரை காப்பாற்றப்படுகிறார்.
சிவி
சிவி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாரர் பேய் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் யோகி, ஜெயஸ்ரீ, அனுஜா ஐயர் நடித்திருந்தார்கள். கிருஷ்ணாவாக நடிக்கும் கதாநாயகன் புகைப்படத் தொழில் செய்து வருகிறார். அப்பொழுது தற்செயலாக எடுக்கும் ஒரு புகைப்படத்தில் பேய் ஒன்று இருக்கிறது. அவர் யார் என்று தேடிப் பார்க்கும் பொழுது அவன் கல்லூரி காலத்தில் படித்த நந்தினி என்ற பெண் என தெரிய வருகிறது.
நந்தினி என்ற பெண்ணை கிருஷ்ணா காதலிப்பது போல் நடித்து ஏமாத்தி இருப்பான். கிருஷ்ணாவின் நண்பர்களும் நந்தினியிடம் தவறாக நடக்க, அதை கிருஷ்ணா ஆதரிப்பது போல நடந்து கொள்வான். இதனால் உண்மையாக காதலித்த நந்தினி, மாடியில் இருந்து கீழே குதித்து இறந்து போக, அதன் பிறகு ஆவியாக வந்து கிருஷ்ணாவின் நண்பர்களை கொலை செய்துவிடுவாள். ஆனால் கிருஷ்ணாவை கொலை செய்யாமல் அவனின் தோள் மீது இறக்கும் வரை அமர்ந்திருப்பாள்.
ஜகன் மோகினி
ஜகன் மோகினி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் ராஜாவாக உள்ள கதாநாயகன் காட்டில் வசிக்கும் ஜகன் மோகினி என்ற பெண்ணின் அழகில் மயங்குகிறான். பிறகு அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும், நீதான் என்னுடைய ராணி என்றும் கூறி ஏமாற்றுகிறான். அவனின் பேச்சை நம்பி ஜகன் மோகினி காட்டில் காத்திருக்கிறாள். இறுதியாக ராஜா ஒரு ஏமாற்றுக்காரன் என தெரிய வருகிறது. இதனால் அடுத்த ஜென்மத்தில் அவனை நிச்சயம் பெறுவேன் என கூறி தற்கொலை செய்து கொள்கிறார்.
அடுத்த ஜென்மத்தில் பேயாகப் பிறந்து காட்டி இருக்கிறாள். ராஜாவும் மறு ஜென்மம் பெற்று ஒரு மனிதனாக அதே காட்டிற்கு தண்ணீர் குடிக்க செல்கிறார். அப்போது ஜெகன் மோகினி அவன் முன்னாள் தோன்றி தனது அழகாய் அவரை ஈர்க்கிறாள். ஆனால் அவர் வேறு ஒரு பக்தி உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறான். இறுதியாக ஜெகன் மோகினி ராஜாவை அடைந்தாரா என்பது தான் இந்த படத்தின் கதையாக அமைந்திருக்கும்.
ஜென்ம நட்சத்திரம்
இந்தத் திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இது திரைப்படம் ஹாலிவுட் வெளியான தீ ஓமன் படத்தின் ரீமேக் ஆகும். சாத்தானின் குழந்தையாக ஒரு குழந்தை பூமியில் பிறக்கிறது. அந்த குழந்தை செய்யும் திகிலான விஷயங்கள் படத்தில் மைய கதையாக அமைந்துள்ளது. ஒரு மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறக்கிறது அதில் ஒரு கர்ப்பிணி குழந்தை பிறந்ததும் இறந்து விடுகிறாள். மற்றொரு கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தை இறந்து விடுகிறது. இதனால், இறந்து போன குழந்தைக்கு பதிலாக உயிர் உள்ள குழந்தையை மாற்றி வைத்து தன்னுடைய சொந்த குழந்தை போல வளர்த்து வருகிறார்கள்.
அந்த குழந்தை வளரும் போது சாத்தானின் குழந்தையாக வளர்கிறது. அந்த குழந்தையின் உண்மையை தெரியும் அனைவரையும் இந்த குழந்தை கொலை செய்து வரும் பட முழுக்க திகிலான காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.
ஜமீன் கோட்டை
இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த திகில் திரைப்படமாகும். இத்திரைப்படம் ஒரு ஊரில் ஒரு ஜமீன் கோட்டை ஒன்று இருக்கும் அந்த ஜமீன் கோட்டையில் பேய் இருப்பதாக அந்த கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அந்த ஜமீன் கோட்டையில் பல அரியவகை பொக்கிஷங்கள் இருப்பதாக நம்பி ஹீரோவும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அங்கு செல்கிறார். ஆனால் அங்கு பேய் இருப்பதை உறுதி செய்த பிறகு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இறுதியாக தெய்வ சக்தியுடன் ஜமீன் கோட்டையில் உள்ள பேயை விரட்டி மக்களை அச்சத்தில் இருந்து எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் என்பதை இந்த படத்தின் கதையாக அமைந்திருக்கும்.
தங்க பாப்பா
இத்திரைப்படம் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஷாமிலி, ராம்கி, நம்பியார், தலைவாசல் விஜய், ஐஸ்வர்யா, ஸ்ரீஜா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் அபிராமிக்கு ஆவி பிடித்து மர்மமான முறையில் மக்களை கொல்கிறாள். இதனால் ரவியும் ,கௌரியும் அவரது இளைய மகள் அபிராமியை அழைத்துக்கொண்டு யாரும் இல்லாத ஒரு வீட்டிற்கு குடி பெயர்கின்றனர். அபிராமி அங்கிருந்து செய்யும் திகலான செயல் படத்தின் கதையாகும்.