அமலா ஷாஜியை குறை சொல்ல நீங்கள் யார்!.. பொங்கி எழுந்த ரசிக பட்டாளம்!..

Amala Shaji : சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு சினிமாவிற்கும் சமூக வலைத்தளத்திற்கும் இடையேயான உறவு என்பது மிக நெருக்கமானதாக ஆகிவிட்டது. சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் நேரடியாக சினிமாவிற்கு வருவதற்கான வாய்ப்பு என்பது தற்சமயம் அதிகமாகவே உள்ளது.

நடிகை கல்யாணி பிரியதர்ஷனை கூட ஹீரோ திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படத்தை பார்த்துதான் தேர்ந்தெடுத்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த அளவிற்கு Instagram தளத்திற்கு மதிப்பு இருந்து வருகிறது.

அதனால் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பவர்களும் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். அப்படியாக இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ்கள் கொண்டிருப்பவர் அமலாஷாஜி. இவர் தொடர்ந்து வீடியோக்கள் போட்டு அதன் மூலமாக தனக்கென ஒரு ரசிகப்பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்சமயம் ஒரு திரைப்படத்தில் 30 வினாடி காட்சிக்காக அமலா ஷாஜியை அழைத்து இருக்கின்றனர். அதற்கு சம்பளமாக அமலா ஷாஜி 2 லட்ச ரூபாய் கேட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த தொகை அதிகம் என்று நினைத்த படக்குழு அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

மேலும் ப்ரியன் என்கிற பாடல் ஆசிரியர் ஒரு மேடையில் பேசும்பொழுது அமலா ஷாஜியை மிகவும் மோசமாக விமர்சித்து இருந்தார். இது குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்பதை நடிப்பவர்களுக்கு கேட்கும் உரிமை உண்டு.

அதை கொடுக்க முடியும் முடியாது என்று கூறி முடித்து விட்டிருக்கலாம் அதை விட்டுவிட்டு எதற்கு பொதுவெளியில் அவர்களை திட்ட வேண்டும் மேலும் தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட ஒழுங்காக நடிப்பதில்லை.

அதை யாரும் கேட்பதும் இல்லை கேட்கும் சம்பளத்தை அவர்களுக்கு கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அதனுடன் ஒப்பிடும்பொழுது அமலா ஷாஜி கேட்ட இரண்டு லட்சம் குறைவான தொகை தானே அவரும் பல வருடங்கள் போராடி தானே இப்படியான ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்று கேட்டு வருகின்றனர்.