நானும் இங்கேயே தங்குறேன்! –  நடுக்காட்டில் தங்கிய ரஜினிகாந்த்!

தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் ரஜினிகாந்த். தமிழில் டாப் 10 வசூல் சாதனை நடிகர்கள் என்றால் அதில் முதல் இடம் ரஜினிக்குதான் கொடுக்க வேண்டி இருக்கும்.

ஆரம்ப காலம் முதல் இப்போது வரை ரஜினியிடம் ஒரு எளிமை உண்டு என்று பலரும் திரைத்துறையில் கூறுவது உண்டு. அதை மெய்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் 1970களில் நடந்தது. அப்போதுதான் ரஜினிகாந்த் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார்.

அவரை வைத்து எஸ்.பி முத்துராம், புவனா ஒரு கேள்விக்குறி என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த படத்திற்கான ஒரு காட்சியை எடுப்பதற்காக தடாவில் இருக்கும் ஒரு பகுதிக்கு சென்றது படக்குழு. ஒரே நாளில் படத்தை எடுத்துவிட்டு சென்னை திரும்பி விடலாம் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பை ஒரே நாளில் முடிக்க முடியவில்லை. அந்த காட்டு பகுதியில் தங்குவதற்கு ஒரு வீடும், டீக்கடையும் மட்டுமே இருந்தது. சென்னைக்கு திரும்ப சென்றுவிட்டு வருவது சிரமம். எனவே இங்கேயே தங்கி மறுநாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு செல்லலாம். டீக்கடையில் என்ன கிடைக்கிறதோ அதை தின்றுவிட்டு, அந்த வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் ரஜினிகாந்தை எப்படி இங்கே தங்க சொல்வது என யோசித்த எஸ்.பி முத்துராம் அவரை மட்டும் சென்னைக்கு சென்றுவிட்டு காலையில் வர சொன்னார். உடனே ரஜினிகாந்த் “மற்றவர்கள் இங்கே தங்கும்போது நான் மட்டும் எதற்கு சென்னையில் போய் தங்க வேண்டும். நானும் இங்கேயே தங்குகிறேன்” என கூறி அங்கேயே தங்கிவிட்டார்.

Refresh