Cinema History
மரத்துல இருந்து கீழ இறங்க மாட்டேன்!.. படப்பிடிப்பில் அடம் பிடித்த விஜயகாந்த்!..
தமிழ் திரையுலக நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் தற்போதுள்ள பெரும் நடிகர்களை விட அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வந்தது. தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் 18 படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த் மட்டுமே.
அந்த அளவிற்கு அவரது படங்களின் மீது மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. வெறும் கதாநாயகன் கதாபாத்திரம் மட்டும் அல்லாமல் அண்ணன், அப்பா என அனைத்து கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வந்தார் விஜயகாந்த்.
தமிழில் கயிறை கட்டி சண்டை போடுவதில் மிகவும் பிரபலமானவர் விஜயகாந்த். மற்ற நடிகர்களை விடவும் மிகவும் கஷ்டப்பட்டு விஜயகாந்த் அதை செய்வார். கஜேந்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருமுறை நடந்துக்கொண்டிருந்தப்போது அதில் மரத்தில் இருந்து கயிறை கட்டிக்கொண்டு விஜயகாந்த் குதிக்கும் சண்டை காட்சி இருந்தது.
பொதுவாக இந்த மாதிரி சண்டை காட்சிகளில் ஒரு சீன் எடுக்கப்பட்ட பிறகு நடிகருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிறகு டேக் சரியாக இருக்கிறதா என சோதனை செய்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பை துவங்குவார்கள். ஆனால் அதற்கெல்லாம் நேரமெடுக்கும். நான் மரத்தின் மேலேயே அமர்ந்து கொள்கிறேன் டேக் ஓ.கே ஆனதும் சொல்லுங்கள் என கூறி மரத்தின் மேலேயே அமர்ந்திருக்கிறார் விஜயகாந்த்.
இந்த நிகழ்வை நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.