காணாமல் போன அனாபெல் பேய் பொம்மை… பீதியில் இருக்கும் கிராமத்து மக்கள்..!

ஹாலிவுட்டில் தொடர்ந்து காஞ்சுரிங் திரைப்படங்கள் என்று சில திரைப்படங்கள் வந்து கொண்டிருப்பது பலருக்கும் தெரியும். அந்த திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு உண்டு.

காஞ்சுரிங், நன், அனாபெல் என்கிற எல்லா கதைகளிலுமே வாரன் தம்பதியினர் எனப்படும் எட் மற்றும் லொரையன் வாரன் ஆகிய இருவர்தான் பேய் ஓட்டுபவர்களாக இருப்பார்கள்.

உண்மையில் 1960 களில் நிஜமாகவே பேய் ஓட்டுவதில் அவர்கள் பிரபலமானவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனுபவத்தைதான் இப்போது படமாக்கி வருகின்றனர்.

அந்த கதைகளில் அனாபெல் மிகவும் பிரபலமான கதையாகும். அனாபெல் கதையில் வரும் ’ராகெடி ஆன்’ என்கிற பொம்மை மிகவும் பிரபலமானதாகும். அந்த பொம்மையை ஒரு நர்சிங் ஸ்கூல் பெண் வைத்திருந்தார். ஆனால் அந்த பொம்மைக்குள் அனாபெல் என்கிற சிறுமியின் ஆவி இருந்தது.

அது முதல் அனாபெல் என்கிற பெயருடன் அந்த பொம்மை பிரபலமானது. இந்த நிலையில் வாரன் தம்பதியினர் பேய் விரட்டிய பிறகு அந்த சாப பொருளை தங்களுடைய அருங்காட்சியகத்தில் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஒரு அருங்காட்சியகம் சமீபத்தில் அனாபெல் பொம்மையை அனுமதி பெற்று ஊர் முழுக்க காட்சி படுத்த திட்டமிட்டது.இந்த சமயத்தில் லூசியானாவில் உள்ள ரெசார்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு அனாபெல் பொம்மைதான் காரணம் என பேச்சுக்கள் இருந்தன.

இதற்கு நடுவே கண்ணாடி பெட்டிக்குள் இருந்த அனாபெல் பொம்மை காணாமல் போய்விட்டது. இது உள்ளூர் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அமானுஷ்ய ஆய்வாளரான டான் ரிவேரா கூறும்போது அமானுஷ்ய பொம்மை அனாபெல் காணாமல் போகவில்லை. வீணாக வதந்திகளை பரப்பாதீர்கள் என விளக்கமளித்துள்ளார்.