காமெடி கதையாக வெளிவர இருக்கும் அனகோண்டா.. வெளிவந்த தமிழ் ட்ரைலர்..!

ஹாலிவுட்டில் சர்வைவல் திரில்லர் எனப்படும் படங்களுக்கு எப்பொழுதுமே அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது. உயிர் வாழும் போராட்டத்தை கதைக்களமாக கொண்டு பெரும்பாலும் இந்த மாதிரியான படங்களின் கதைக்களம் இருக்கும்.

அனகோண்டா ஜுராசிக் பார்க் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் இந்த மாதிரியான கதைகளை கொண்டதுதான். ஒரு ராட்சச பாம்பு அல்லது ராட்சச மீன் மாதிரியான உயிரினங்கள்தான் இதில் மக்களை துரத்துபவையாக இருக்கும்.

பெரும்பாலும் இந்த மாதிரியான திரைப்படங்கள் மிக சீரியசான கதைகளை கொண்டிருக்கும். நிமிடத்திற்கு நிமிடம் என்ன நடக்கும் என்கிற பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதையே காமெடி கதையாகக் கொண்டு இப்பொழுது அனகோண்டா படத்தை திரும்பவும் எடுத்து இருக்கின்றனர்.

இந்த படத்தில் பால் ரட் மற்றும் ஜாக் ப்ளாக் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கின்றனர். படத்தின் கதைப்படி ஏற்கனவே எடுக்கப்பட்ட அனகோண்டா திரைப்படத்தை பார்க்கும் கதாநாயகன் அதே படத்தை திரும்ப நாம் படமாக்க வேண்டும் என்று செல்கின்றார்.

அதை படமாக்குவதற்கு குறைந்த அளவில்தான் பட்ஜெட் கிடைக்கிறது. எனவே ஒரு மலைப்பாம்பை வைத்து படப்பிடிப்பை துவங்கும் பொழுது அந்த மலை பாம்பு தவறுகளாக இறந்து விடுகிறது. இதனிடையே படப்பிடிப்பை தொடர்வதற்கு இவர்களுக்கு ஒரு அனகோண்டா பாம்பு தேவைப்படுகிறது.

Social Media Bar

அதனை தேடி ஒரு தீவுக்கு செல்கின்றனர். அங்கு மனிதர்களை வேட்டையாடும் பாம்புகள் இருக்கின்றன. படம் எடுக்க சென்றவர்கள் உண்மையிலேயே அனகோண்டாவிடம் சிக்குகின்றனர் பிறகு அவர்கள் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறார்கள் என்பதாக தான் கதைக்களம் அமைந்து இருக்கிறது முழுக்க முழுக்க காமெடியாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.