பேருந்தில் எல்லாம் தப்பா நடத்துக்குவாங்க!.. மனம் திறந்த அனிகா!..

சிறு வயது முதலே மலையாள சினிமாவில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனிகா சுரேந்தர். தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு விஸ்வாசம் திரைப்படத்திலும் இவர் அஜித்திற்கு மகளாக நடித்தார். அதிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை அஜித் மகள் என்றே அழைக்க துவங்கினர். ஏதாவது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டால் கூட அஜித் மகளே இப்படி செய்யலாமா என கேட்கும் அளவிற்கு பலரும் இவர் அஜித் மகள் என்றே நம்பி வந்தனர்.

அதன் பிறகு கௌதம் மேனன் இயக்கிய குயின் என்கிற சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்சமயம் மலையாளத்தில் கதாநாயகியாகவும் நடிக்க துவங்கினார். முதல் படமே படு கவர்ச்சியாய் நடித்திருந்தார் அனிகா.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அனிகா கூறும்போது தற்சமயம் பிடி சார் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் நடிப்பதற்கான முக்கியமான காரணம் அந்த படத்தில் பேருந்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பேசியுள்ளனர்.

தினசரி பெண்கள் பேருந்துகளில் அவதிக்குள்ளாகிறார்கள். அவர்களை தவறாக தொடுகின்றனர். ஆனால் எனக்கு இதுவரை அந்த மாதிரி அனுபவங்கள் நடந்தது இல்லை. ஏனெனில் எப்போதும் என் கூட என் அம்மாவும் இருப்பார்கள் என கூறியுள்ளார் அனிகா.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version