ஜெயிலர் 2வுக்கு அனிரூத் கேட்ட சம்பளம்..! ஆடிப்போன தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள் என்றாலே அதற்கு அனிரூத் தான் இசையமைக்க வேண்டும் என கேட்க துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு அனிரூத்தின் இசைக்கு மார்க்கெட் உருவாகி இருக்கிறது. இதனால் அனிரூத்தும் சின்ன படங்களுக்கு எல்லாம் இசையமைப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.

பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்து வருகிறார். மேலும் அனிரூத்தின் இசை என்பது அந்த திரைப்படங்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எப்படியும் குறைந்தது ஒரு பாட்டாவது அனிரூத் இசையில் பிரபலமடைந்துவிடுகிறது.வேட்டையன் தேவரா மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் படம் வெளியாவதற்கு முன்பே அந்த படங்களில் அனிருத் இசையமைத்த பாடல்கள் அதிக பிரபலமடைந்தன.

அனிரூத் சம்பளம்:

jailer 2

இந்த மாதிரியான காரணங்களால் அனிருத் தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் படங்களில் இசையமைத்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என்று மற்ற மொழிகளிலும் அனிருத்தின் புகழ் பரவி வருகிறது. இந்த நிலையில் மார்க்கெட் இருக்கும்போதே சம்பளத்தை உயர்த்தி விட வேண்டும் என்று கடுமையாக சம்பளத்தை அதிகரித்து வருகிறார் அனிரூத்.

அதிலும் வேட்டையன் திரைப்படத்தில் வந்த மனசிலாயோ பாடல் அதிக பிரபலத்தை கொடுத்த பிறகு இப்பொழுது அனிருத்தின் சம்பளம் அதிகரித்து இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார்.

அதனை தொடர்ந்து அடுத்து இரண்டாம் பாகத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க போவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பதற்கு அனிருத் 17 கோடி சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது ஆனால் கண்டிப்பாக இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாளர் என்கின்றனர் ரசிகர்கள்.