கேரளத்து பெண்குட்டி – அழகிய உடையில் அனுபாமா!
மலையாள திரைப்படங்கள் மூலமாக சினிமாவிற்குள் வந்து தற்சமயம் தென்னிந்திய சினிமா துறையில் பெரும் நடிகையாக இருப்பவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரி.
மலையாளத்தில் ப்ரேமம் என்கிற திரைப்படத்தில் முதல் முறையாக அறிமுகமானார் அனுபாமா. இந்த படம் தென்னிந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அனுபாமா பிரபலமானார்.
தொடர்ந்து மலையாள சினிமா, தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். தமிழில் கொடி திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தெலுங்கில் அவர் நடித்து வெளியான கார்த்திகேயா 2 நல்ல வெற்றியை பெற்றது. தற்சமயம் அனுபாமா தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.